மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ பிப்.26 - மார்ச் 4

மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ பிப்.26 - மார்ச் 4
Updated on
3 min read
மகரம்:
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் மன குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும்.

கலைத் துறையினருக்கு உயர்நிலையில் உள்ளவர்களுடன் மன வருத்தம் ஏற்படும் படியான சூழ்நிலை வரும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். அரசியல்வாதிகளின் திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். விரும்பத்தகாத வாக்கு வாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் சில நேரங்களில் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்துவதுடன் குடும்பத்தைவிட்டும் பிரிய நேரிடும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

திருவோணம்: இந்த வாரம் புதிய வேலை வாய்ப்புகள் தகுதிக்கு ஏற்றபடி அமையும். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நீடிக்கும். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள், வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் அசையா சொத்துகளாலும், வண்டி, வாகனங்களாலும் வீண் செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். பண வரவுகள் சிறப்பாகவே இருக்கும்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன திருப்தி ஏற்படும்.

கும்பம்:
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் பண வரத்து அதிகரிக்கும். சுபச் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். எதை பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

கலைத் துறையினருக்கு நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள். தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.

சதயம்: இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நவீன முறைகளைக் கையாண்டு தொழிலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்குத் தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் தொழிலில் சுணக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர்வரத்து சிறப்பாகவே இருக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் கெடுபிடிகள் அதிகரிப்பதால் கிடுக்குப் பிடியான சூழ்நிலைகள் உண்டாகும். கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வர வேண்டிய பணத் தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட உடல் ஆரோக்கியம் உண்டாகும். கஷ்டங்கள் குறையும்.

மீனம்:
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ), சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் வீண் மன குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச் சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். மன வருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். கலைத் துறையினருக்கு பாராட்டுகள் வரும்.

வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். நண்பர்களிடையே உறவு நிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எந்த விஷயத்திலும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். மாணவ-மாணவியர் கல்வியில் நல்ல முன்னேற்றமுடன் எதிர்பார்த்த மதிப் பெண்ணைப் பெற முடியும். அடிக்கடி ஞாபக மறதி ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. தேவையற்ற பொழுது போக்குகளையும், நண்பர்களின் சகவாசத்தையும் தவிர்ப்பது நல்லது.

உத்திரட்டாதி: இந்த வாரம் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைத்துக் கொள்வது சிறப்பு. இக்காலங்களில் உடல் நிலையில் சிறு சிறு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதால் நிம்மதியும், ஒற்றுமையும் உண்டாகும்.

ரேவதி: இந்த வாரம் பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி முல்லை மலர் சாற்றி வழிபடுவது செல்வ சேர்க்கையை தரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ பிப்.26 - மார்ச் 4
Dahaad: சாதிய, பாலின பேதத்துக்கு எதிராக கர்ஜிக்கும் காவல் அதிகாரி அஞ்சலி | திரை தேவதைகள் 06

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in