கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ செப்.24 - 30

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ செப்.24 - 30
Updated on
3 min read
கடகம்:
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- ராசியில் செவ்வாய், குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் - சுக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும்.

பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும்.

உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் கணவன் - மனைவிக்கிடையே சில ஊடல்கள் வரும். முக்கிய பொறுப்புகளை வகித்து வருபவர்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டி வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

பூசம்: இந்த வாரம் பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் பகைமையை வளர்த்துக் கொள்ள நேரிடும். மனதில் இனம்புரியாத கவலை இருந்து கொண்டிருக்கும். தியானம் செய்ய நிம்மதி கிட்டும்.

ஆயில்யம்: இந்த வாரம் பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம்.

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

சிம்மம்:
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் வீண் கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளிவட்டார தொடர்புகளில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது.

பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

மகம்: இந்த வாரம் சக வியாபாரிகளால் தொந்தரவு ஏற்படும். சேமிப்பிற்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் வருமானம் அதிகமாக வரும். எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

பூரம்: இந்த வாரம் தங்களுக்கு உள்ள வேலையை மட்டும் சரியாக செய்யுங்கள். மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அது உங்களுக்கு பெரும் தலை வலியாக அமைந்துவிடலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் புதிய வீடு, வாகனம் போன்றவைகளில் அதிக லாபத்தை காணலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் சரியான பேச்சுவார்த்தைகள் மூலம் லாபம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெரியோர் ஆசி கிட்டும்.

பரிகாரம்: சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.

கன்னி:
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சூரியன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம்.

பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பேச்சில் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணமிருப்பின் அதை தள்ளிவையுங்கள்.

அஸ்தம்: இந்த வாரம் அனைவரிடமும் விட்டுக்கொடுத்து போவது நல்லது. குழப்பத்தின் காரணமாக முடிவுகள் தவறாக அமைந்து விடலாம். ஆதலால் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்வது மிகவும் உத்தமம்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் சிலருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தக்க நேரத்தில் உணவு அருந்த முடியாமல் அதனால் வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகளுக்கு மனக்குழப்பங்கள் ஏற்படக் கூடும்.

பரிகாரம்: லட்சுமி வராஹப் பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை:</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை:

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ செப்.24 - 30
Sara's: தாய்மையில் இருந்து விடுவித்துக் கொண்ட சாராவின் சாய்ஸ் | திரை தேவதைகள் 36

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in