கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ பிப்.12 - 18

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ பிப்.12 - 18
Updated on
4 min read
கடகம்:
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், சனி, ராகு - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பண தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். பெண்களுக்கு மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

புனர்பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும்.

பூசம்: இந்த வாரம் வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும். நன்மைகள் உண்டாகும். மனோ பயம் விலகும். எல்லோரிடமும் அனுசரித்து பேச வேண்டும். பேச்சின் இனிமை சாதூரியத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பண வரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும்.

ஆயில்யம்: இந்த வாரம் மன கவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: அருள்மிகு ஆதி பராசக்தி அன்னையை தரிசித்து வருவது உடல் ஆரோக்கியத்தை தரும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனை தரும்.

சிம்மம்:
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது - ரண ருன ரோக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், சனி, ராகு - லாப ஸ்தானத்தில் குரு(வ) என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும்.

உறவினர்களிடம் கவனம் தேவை. பெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.

மகம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பண வரத்து இருக்கும். மனக் கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வம் சேரும். மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப பிரச்சனை தீரும். நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்பட வேண்டிய சூழல் உருவாகும்.

பூரம்: இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனக் கஷ்டம் உண்டாகும். வீண் செலவு ஏற்படும். உடல் சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கு இடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம்.

பரிகாரம்: அருணாசலேஸ்வரரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

கன்னி:
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், புதன், சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பணவரவில் திருப்தி இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும்.

வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பண புழக்கம் திருப்தி தரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். பண வரத்து இருக்கும். மன கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

அஸ்தம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பண வரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அதிகரிக்கும். பண தேவை அதிகரிக்கும். வீண் செலவு மன அமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்ம பெருமாளை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும்.

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ பிப்.12 - 18
அஸ்வினி முதல் ரேவதி வரை: பிப்ரவரி மாத நட்சத்திர பலன்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in