கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ மார்ச் 5 - 11

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ மார்ச் 5 - 11
Updated on
4 min read
கடகம்:
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் ராசியைப் பார்க்கும் குருவாலும் சனியாலும் எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். பண வரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான முடியும். தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும். லாபம் அதிகரிக்கும். தேவையான பண உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். சுப காரியங்கள் நடக்கலாம். சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். சந்தோஷமாக காணப்படுவார்கள். குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும். பெண்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள்.

கலைத் துறையினருக்கு சக கலைஞர்களைப் பகைத்துக் கொள்ளாமல் சுமூகமாகப் பழகி வருவது அவசியம். வெளியூர்ப் பயணங்களின் போது கவனம் தேவை. அரசியல் வாதிகளுக்கு உங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றி தலைமையின் பாராட்டுகளைப் பெறுவது இப்போதைய நிலையில் மிகக் கடினமான இருக்ககூடும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். தொழிலாளர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றால் நல்ல மேன்மை உண்டாகும்.

பூசம்: இந்த வாரம் கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய தொகையைக் கூட எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத பண வரவுகளால் உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

ஆயில்யம்: இந்த வாரம் பொன், பொருள் சேரும். மங்களகரமான சுப காரியங்களுக்கான முயற்சிகளில் கூட அனுகூலப்பலனை அடைய முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

சிம்மம்:
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- லாப ஸ்தானத்தில் குரு(வ) - ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகாமல் இருக்க எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் இருந்த மந்தமாக நிலை மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலைப் பளுவும் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

கலைத் துறையினருக்கு பல முன்னனி நிறுவனங்கள் தாமே உங்களைத் தேடி வந்து வாய்ப்பு கொடுக்கும். உங்கள் திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தி ஆதரவை பெருவாரியாகப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு உங்கள் தன்னலமற்ற தொண்டுக்குப் பாரட்டுகள் குவியும். உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் உங்களூக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயத்தை விலக்கி விட்டு ஆர்வமாக படிப்பது வெற்றிக்கு உதவும்.

மகம்: இந்த வாரம் உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் சாதனை படைப்பார்கள். அரசியல் வாதிகளின் பெயர், புகழ் உயரும். தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

பூரம்: இந்த வாரம் நீங்கள் எடுக்கும் காரியங்களில் ஓரளவுக்கு அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். பண வரவுகளில் இருந்த தடைகள் சற்றே விலகி கடன்கள் படிப்படியாகக் குறையும். திருமண சுப காரிய முயற்சிகளில் கூட அனுகூலமான பலனை அடைய முடியும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உற்றார்- உறவினர்கள் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஓரளவுக்கு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். கொடுக்கல்- வாங்கல்களிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் சிறப்பான லாபங்கள் உண்டாகும்.

பரிகாரம்: முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

கன்னி:
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது - ராசியில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராகு, சூரியன், செவ்வாய், புதன்(வ) - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் பண வரத்து. பொருள் வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு பல முயற்சிக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சக கலைஞர்களின் போட்டி உங்கள் வாய்ப்புகளுக்கு சவாலாக இருக்கும். அரசியல் வாதிகளுக்கு உங்களுக்கு தேவையற்ற வீண் சோதனைகள் வரலாம். உங்களைப் பாராட்டியவர்களே இப்போது தரக்குறைவாக பேசலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறும். சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் அபி விருத்தியும் பெருகும். வெளியூர், வெளி நாட்டுத் தொடர்புடையவையும் ஏற்றத்தை ஏற்படுத்தும்.

அஸ்தம்: இந்த வாரம் சிந்தித்து சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிலும் நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் இருந்த கெடுபிடிகள் குறைந்து நிம்மதியான நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் உங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்ததில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து நட்புக் கரம் நீட்டுவார்கள்.

பரிகாரம்: நவக்கிரகங்களை வணங்கி வர எல்லா நலன்களும் உண்டாகும். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.

<div class="paragraphs"><p>இந்த வார கிரகங்களின் நிலை</p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ மார்ச் 5 - 11
Three of Us: ஷைலஜாவின் மறதியும் நினைவுகளும் கடத்தும் அனுபவம் | திரை தேவதைகள் 07

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in