கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 1 - 7

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 1 - 7
Updated on
3 min read

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் கேது, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன் என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 01-06-2023 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் கருமமே கண்ணாக இருப்பீர்கள். கொஞ்சம் பதற்றத்தை குறைத்துக் கொள்வது நல்லது. முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். வெளியூர் பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்.

தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். பணவரத்து இருக்கும். குடும்பாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும்.

கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மேலிடம் உங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளும். மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சினை, தொழிற்பிரச்சினை கல்வியில் தடை போன்றவை விலகும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய ஸ்தானத்தில் கேது, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 01-06-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் உங்களிடம் உள்ள திறமை அதிகரிக்கும். சுக்கிரன் இருப்பு பணவரத்தை அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும். குடும்பாதிபதி புதன் சஞ்சாரத்தால் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும்.

கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். அரசியல்வாதிகளுக்கு நலல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். மாணவர்களுக்கு கவனமாக பாடங்களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை.

பரிகாரம்: தினமும் பைரவரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 01-06-2023 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் ஓய்வு இன்றி கடுமையாக உழைப்பீர்கள். எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள்.

கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள்.

பரிகாரம்: ஐயப்பனுக்கு நெய் தீபம் ஏற்றி வலம் வர எல்லா கஷ்டங்களும் நீங்கும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன் 1 - 7 வரை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in