

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன், குரு, ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது, சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது.
கிரகமாற்றம்: 01-06-2023 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எடுக்கு முயற்சிகள் பலிதமாகும். கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள்.
குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு கூடுதலாக கிடைக்கும். மற்றவர்களுக்கு முன்ஜாமீன் போடும் முன்பு யோசிக்கவும். கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் முருகன் ஆலயத்திற்குச் சென்று அரளிப்பூ அர்ப்பணித்து வர இடர்பாடுகள் அகலும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், குரு, ராகு என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றம்: 01-06-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் பேச்சாற்றல் மூலம் எப்படிப்பட்ட சிக்கலான காரியங்களையும் சுமூகமாக முடிப்பீர்கள். பொருள் வரவை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.
செய்தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். போட்டி குறையும். பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மனமகிழ்ச்சி கொள்வீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.
கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் திரும்ப கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் இருக்கும் தாயாரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றம்: 01-06-2023 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் சொல்லிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிப்பீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து செய்வது நல்லது. மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் மூலம் ஏற்பட்ட டென்ஷன் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனத்தாங்கல்கள் நீங்கும். உறவினர்களிடம் இருந்து வந்த வேற்றுமைகள் அகலும். பெண்களுக்கு வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும்.
கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.
பரிகாரம்: புதன் அன்று லட்சுமி நரசிம்ம பெருமாளை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன் 1 - 7 வரை
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |