Published : 11 May 2023 06:28 PM
Last Updated : 11 May 2023 06:28 PM
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார் |15-05-2023 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் விரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும். மனைவி வகை உறவினர்கள் உங்கள் உதவிகளை நாடி வரவும் மார்க்கம் உண்டு. கணவன் மனைவி மற்றும் குடும்ப ஒற்றுமையில் இணக்கமான சூழ்நிலை உண்டு. தந்தையின் ஆதரவுடன் புதிய தொழில்கள் துவங்கி செயல்படுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். வேலையினால் ஏற்பட்ட சோர்வும், மனஅழுத்தமும் இனி இருக்காது. தொழிலதிபர்கள் கடந்த காலங்களில் மனதில் இருந்த சஞ்சலங்கள் மாறி நம்பிக்கை ஒளி பிறக்கும். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று சிறந்த முன்னேற்றம் காண்பர். பால்பண்ணை அதிபர்கள் தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள். கலை அழகு மிக்க பொருட்களை உற்பத்தி செய்வோர் லாபம் பெறுவர். மனிதாபிமான செயல்கள் அதிகம் செய்வதால் சமூசத்தில் அந்தஸ்தும் புகழும் ஏற்பட்டு கவுரவமான பதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு, நீண்ட நாட்களாக சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத் துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும். மாணவர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் படிப்பு ரீதியிலும் குடும்ப ரீதியிலும் தகுந்த ஒத்துழைப்பு தருவார்கள். சமூக சேவைகளில் அதிக ஆர்வம் இருக்கும். எல்லோரும் நட்புடனே பழகுவர். தந்தை மகன் உறவுமுறைகள் சமச்சீராய் இருக்கும். வெளியூர் பிரயாணங்கள் அனுபவ பாடங்களை கற்றுத்தரும்.
பரிகாரம்: அனுமான் கோவிலை வலம் வரவும். வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும். மல்லிகை மலரை பெருமாளுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்யவும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தைரிய ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வ புண்ணிய சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். எதிரிகளால் இருந்த தொந்தரவுகளை சமாளிக்க கடந்த காலங்களில் பணம் விரையமானது. அந்நிலை அடியோடு அழிந்து விட்டது. மேலும் நோய்களுக்கான சிகிக்சைக்கோ வீணான செயல்களுக்கோ கிரகநிலை இடம் தராது. கணவன் மனைவி மற்றும் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். உங்களின் பணத் தேவைகளுக்கு வாழ்க்கைத்துணையின் உதவி நிச்சயம் உண்டு.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்களின் வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். உங்கள் வேலைகளுக்கு உரிய அங்கீகாரத்தை மேலதிகாரிகள் வழங்குவார்கள். சக ஊழியர்கள் சற்று தள்ளியே இருப்பார்கள். தொழிலதிபர்கள் அடுக்குமாடி கட்டடங்களை கட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் ஆதாயம் பெற்று முன்னேற்றம் அடைவார்கள் பணப்புழக்கம் தங்கு தடையின்றி இருக்கும். நிறுவனத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும்.
பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தாலும் உயரதிகரிகளாலும் இடப்படும் கட்டளைகளை கவனமுடன் செயல்படுத்தி வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். சுயதொழில் செய்யும் பெண்கள் தங்கள் தொழில் சிறக்க வேலை தெரிந்த மற்ற பெண்களையும் கூட்டு சேர்த்துச் கொள்ளலாம். மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், தகவல்தொழிற்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் உள்ளோர் நல்ல முன்னேற்றம் காணலாம். விரும்பிய துறைகளில் எடுத்து படிப்போருக்கு சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும்.
பரிகாரம்: சிவன் கோவிலை வலம் வரவும். நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளது.
கிரகமாற்றங்கள்: 12-05-2023 அன்று செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 15-05-2023 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் சொல்லால் மகத்துவமும் செயலால் புகழ் கீர்த்தி ஆகியனவும் ஏற்படும். வீடு மனை வாகனம் ஆகிய இனங்களில் மராமத்து பணிகள் நடைபெறும். சம்பாதித்த பணத்தை பாதுகாக்க சேமித்து வைக்க நல்வழிகள் உண்டாகும். வெளியூர் பிரயாணங்கள் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் சென்று வரும் வகையினர் தகுந்த பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு, பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்சினைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவைகள் கிடைக்கப் பெறுவீர்கள். மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். தொழில் நிமித்தமாக சிலர் தூரதேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.
பெண்கள் உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். கணவரை விட்டுப் பிரிந்தவர்கள் கணவருடன் மீண்டும் சேர்வார்கள். உங்களின் கணவருக்கு உங்களால் அனுகூலம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புகள் கைகூடிவரும். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். இந்த கல்வி ஆண்டில் நீங்கள் விரும்பிய பாடம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம்.
பரிகாரம்: ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். முன்னோர்களையும், குல தெய்வத்தையும் தினமும் வணங்கவும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 11 -17 வரை
> மேஷம், ரிஷபம், மிதுனம்
> கடகம், சிம்மம், கன்னி
> துலாம், விருச்சிகம், தனுசு
> மகரம், கும்பம், மீனம்
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT