கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 4 - 10

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 4 - 10
Updated on
2 min read

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும், பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த காரிய ஒன்று நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள்.

பரிகாரம்: அம்மனுக்கு எலுமிச்சையில் மாலை அணிவிக்க தடைகள் விலகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாக கிடைக்கும். சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படி யான சம்பவம் நேரலாம் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது அனைத்து விதமான அத்தாட்சிகளைக் கவனமாக வைத்திருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளைச் செய்து வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேலதிகாரிகளால் நன்மையும் உண்டாகும்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: சிவபுராணம் படித்து சிவனுக்கு மாலை வாங்கி சாற்றுங்கள் துன்பங்கள் பறந்தோடும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சூர்யன், குரு, ராகு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் கிடைக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம்.

பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையைச் செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு நிதானத்தை கடை பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

பரிகாரம்: பெருமாள் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபட துன்பங்கள் பறந்தோடும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 4-10 வரை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in