Last Updated : 12 Apr, 2023 10:28 PM

 

Published : 12 Apr 2023 10:28 PM
Last Updated : 12 Apr 2023 10:28 PM

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஏப்.13 - 19

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், குரு - தொழில் ஸ்தானத்தில் புதன் (வ.ஆ), ராகு - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள். பிரச்சினைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்ட மிட்டு செயலாற்றுவதால் மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் புத்திசாதுரியத்தை பயன்படுத்தி சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: சரஸ்வதி தேவியை பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், குரு - பாக்கிய ஸ்தானத்தில் புதன் (வ.ஆ), ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். கடிதபோக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்கு வரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரத்தும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம்தேவை. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரியவைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள்.

பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும். காரிய வெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - சப்தம ஸ்தானத்தில் சூரியன், குரு - அஷ்டம ஸ்தானத்தில் புதன் (வ.ஆ), ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: இந்த வாரம் மற்றவர்களின் ஆதரவு கிடைக்க செய்யும். புத்திசாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின்போது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய் வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம். குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களி டம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவ பூர்வமான அறிவுத்திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள்.

பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோ தைரியம் கூடும்.

பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். எதிலும் வெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன் | இந்த வாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x