Published : 02 Feb 2023 07:01 PM
Last Updated : 02 Feb 2023 07:01 PM

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ பிப்.2 - 8 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் சனி, சூரியன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் குரு - என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றம்: பிப்ரவரி 04-ம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் உங்களுக்கு நன்மைகளை கிடைக்கும். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் தோன்றும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடைநீங்கி கைக்கு வந்து சேரும்.

மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். பிள்ளைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வழக்குகளில் சுமூக முடிவுகள் வந்து சேரும். வெளிநாட்டிற்கு வேலை, கல்வி தொடர்பாக செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். எதிர்ப்புகள் அகலும்.

அரசியல்வாதிகளுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். பெண்களுக்கு மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகளும் தீரும். மாணவர்கள், ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதால் முன்னேற்றம் அடைவார்கள்.

பரிகாரம்: அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வலம் வரவும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) ராசியில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, சூரியன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் குரு - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றம்: பிப்ரவரி 04-ம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் தடைபட்ட பணம் கைக்கு கிடைக்கும். எதிலும் தயக்கமோ, பயமோ இல்லாமல் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது நல்லது. விரும்பதகாத ஆசைகள் உண்டாகலாம். வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உண்டாகலாம். எல்லா நற்பலன்களும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.

வியாபாரம் செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதப்படலாம். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம்.

அரசியல்வாதிகள் அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து குவியும். பெண்கள் இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். விளையாட்டுகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு ஆலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வரவும். பாடல் பெற்ற ஸ்தலமாக இருந்தால் நலம்.

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி, சூரியன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றம்: பிப்ரவரி 04-ம் தேதி புதன் பகவான் மகர ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் வசதிகள் பெருகும். உறவினர்களுடன் சுமூக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சினையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும்.

தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அரசியல்வாதிகள் வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.

நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வலம் வரவும். இந்தவாரம் கிரகங்களின் நிலை:

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ பிப்.2 - 8 வரை

> மேஷம், ரிஷபம், மிதுனம்
> கடகம், சிம்மம், கன்னி
> துலாம், விருச்சிகம், தனுசு
> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x