

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்) கிரகநிலை - ராசியில் சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன் என கிரகநிலை இருக்கிறது.
பலன்: இந்த வாரம் பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்கள் ஏற்படலாம். சிலருக்கு மேலிடம் பதவிகள் கொடுக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பணிச்சுமை ஏற்படும்.
பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.
பரிகாரம்: விநாயகரை வணங்கி வர காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சினை தீரும்.
***********
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது.
பலன்: இந்த வாரம் பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் சரியாக புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுபறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகாரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். அரசியல்வாதிகள் அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: பைரவருக்கு செவ்வரளி சாற்றி வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.
***********
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் குரு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது.
பலன்: இந்த வாரம் பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.
அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். அரசியல்வாதிகளுக்கு அனுகூலமாக இருந்தாலும் பற்பல சோதனைகளை சந்திக்க வேண்டி வரும். கலைத்துறையினருக்கு பல்வேறு வகைகளில் அனுசரனையாக இருக்கும். வெளிநாடுகள் சென்று வருவீர்கள்.
பெண்களுக்கு அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது.
பரிகாரம்: குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.17-23
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |