Published : 13 Oct 2022 09:38 AM
Last Updated : 13 Oct 2022 09:38 AM
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன், புதன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.
இம்மாதம் 18-ம் தேதி சூரியன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் நடந்து கொள்ளும் உங்களுக்கு இந்தவாரம் வரவை போலவே செலவும் இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது. திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்ப வர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக் கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை. முயற்சிகள் தாமதப்படும். மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.
உத்திராடம்: இந்தவாரம் பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும்.
திருவோணம்: இந்தவாரம் உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.
அவிட்டம்: இந்தவாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்: சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.
***********
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது.
இம்மாதம் 18-ம் தேதி சூரியன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: மனத்துணிவால் எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு இந்தவாரம் வீண்கவலை நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதேநேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
தொழிலில் முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் தலைதூக்கும். அவற்றை லாவகமாக கையாண்டு சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயங்களை பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி கரமாக இருக்கும். பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
அவிட்டம்: இந்தவாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.
சதயம்: எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூரட்டாதி: மனமகிழ்ச்சி உண்டா கும். குடும்ப பிரச்சினை தீரும். நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும்.
பரிகாரம்: சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சினைகளும் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும்.
***********
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் குரு(வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலை இருக்கிறது.
இம்மாதம் 18-ம் தேதி சூரியன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்: தூய உள்ளம் படைத்த உங்களுக்கு இந்த வாரம் சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். அஷ்டம ராசியில் சூரியன், கேது சஞ்சாரம் இருக்கும் போது திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். ஆனால் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.
பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாக பேசுவது நல்லது. பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர் களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது.
பூரட்டாதி: வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள்.
உத்திரட்டாதி: எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம்.
ரேவதி: கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: குரு பகவானை வணங்கி வருவது மனஅமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.6 -12
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT