மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.6 - 12

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.6 - 12
Updated on
2 min read

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன், புதன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.

பலன்: இந்த வாரம் சுமாரான பலன்களையே எதிர்பார்க்க முடியும். திடீரென பண வரவு இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வெளியூர் செல்ல நேரலாம். அது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு உதவுவதாக இருக்கும்.

ஒப்பந்ததார், வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை காரணமாக திடீரென டென்ஷன் ஆகலாம். குடும்பத்தில் இருந்து வந்த தேவையற்ற குழப்பங்கள் சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை நல்லபடியாக முடிக்க முடியும். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் உடன் பழகுபவர்களிடம் கவனமாக இருப்பது மிகவும் நன்மையைத் தரும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை தினமும் 21 முறை வலம் வர நன்மைகள் அதிகமாக நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

***********

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சனி(வ) என கிரகநிலை இருக்கிறது.

பலன்: இந்த வாரம் பண வரவு அதிகமாக இருக்கும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் வரவேண்டிய பாக்கிகள் கை கொடுக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் குறித்த நேரத்தில் கிடைக்கப்பெறுவீர்கள்.

புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பு செய்ய வேண்டி வரும். அலுவலகத்தில் உத்தியோக மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் திடீரென மனவருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும்.

பெண்கள் மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். அனைவரின் அன்பும் கிடைக்கப் பெறுவீர்கள்.

பரிகாரம்: தினமும் அனுமத் கவசத்தை சொல்லி வாருங்கள். வாழ்வில் ஏற்றம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

***********

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் குரு(வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன், புதன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலை இருக்கிறது.

பலன்: இந்த வாரம் மனச்சோர்வு உண்டாகலாம். கவலையின்றி வேலையை தொடருங்கள். எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழில், வியாபாரம், வெற்றிகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை எனப்படும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல சாதகமான பலன் கிடைக்கும்.

புதிதாக ஆடை, ஆபரணங்கள் சேரும். பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தீடீரென வரும் எதிர்ப்புகள் அகலும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. சக மாணவர்களின் வேலைகளையும் நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: சிவாலயத்திற்கு சென்று நமசிவாய மந்திரத்தை சொல்லி வாருங்கள். உங்கள் மனம் அமைதி பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.6 -12

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in