Published : 29 Sep 2022 07:02 AM
Last Updated : 29 Sep 2022 07:02 AM

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.5 வரை 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 03-10-2022 அன்று புதன் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். சிலர் மீது கோபப்பட வேண்டி வரும். கோபத்தை கட்டுப்படுத்தினால் மகிழ்ச்சி அடையலாம்.

தொழிலில் பணவரவு எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் சென்றுவர வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கண்டிப்பாக உண்டு. மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இருந்த மனக்கசப்புகள் நீங்கி நல்லுறவு ஏற்பட வாய்ப்புண்டு. பெண்கள் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கலைத்துறையினருக்கு அதிர்ஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய கால கட்டம். அரசியல்வாதிகள் வழக்கு, விவாதங்களில் கவனம் தேவை. உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மீது சந்தேகம் வரலாம். மாணவச்செல்வங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கப் பெறும். தொழில் படிப்புகள் படிப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

புனர்பூசம் 4ம் பாதம்: வெளியூர் பயணம் ஏற்படும்.

பூசம்: பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம்.

ஆயில்யம்: தடைகள் அகலும்.

பரிகாரம்: மாரியம்மனை திங்கட்கிழமையன்று தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் தீரும். மனநிம்மதி உண்டாகும்.

***********

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 03-10-2022 அன்று புதன் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: இந்த வாரம் வாக்குவாதங்கள் மற்றும் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும், உற்சாகம் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் தவறு செய்பவர்களுக்கு அதைச் சுட்டிக்காட்டி சரி செய்வீர்கள். எதிர்பாலினத்தாரால் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும்.

தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். தொழிலில் யோகமான காலமாக இருக்கும். உத்யோகஸ்தர்கள் விண்ணப்பித்திருந்த கடன் தொகை கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் நீண்ட நாளைய பிரச்சினைகள் தீரும். பெண்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் தீரும்.கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைத்து நல்ல புகழை பெற வேண்டிய கால கட்டம்.

அரசியல்வாதிகள் பிறர் பேச்சுகளை நம்பி ஏமாற வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். மாணவ மாணவியர் தங்கள் நிலை உயர அரும்பாடுபட்டு முயற்சி செய்வீர்கள். கல்விச்சுற்றுலா சென்று வருவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

மகம்: முயற்சிகளில் வெற்றியும் பொருளாதார வளமும் வந்து சேரும்.

பூரம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தியாகும்.

உத்திரம் 1ம் பாதம்: கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று வினாயகரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

***********

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) கிரகநிலை - ராசியில் சூர்யன், சுக்கிரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி(வ) - சப்தம ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 03-10-2022 அன்று புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்: இந்த வாரம் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பார்கள். பங்காளிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இளைய சகோதரர்கள் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தொழிலைப் பொறுத்தவரையில் ஆதாயம் அதிகமாக கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டிவரும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு ஆதாயத்தைத் தரும். அதிகாரிகளுக்கு நல்ல சன்மானம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் சுபச் செலவுகள் செய்ய வேண்டிவரலாம்.

கலைத்துறையினருக்கு அனுகூலமான தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் மூத்த தலைவர் ஒருவரால் நீங்கள் புகழப்படுவீர்கள். உடனிருப்போரின் தகுந்த ஒத்துழைப்பை பெற முயற்சிப்பீர்கள். மாணவச்செல்வங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். உற்சாகமான பணிகளில் ஈடுபடுவீர்கள். கல்வி அல்லாத பிற துறைகளிலும் சாதிக்க முயலுவீர்கள்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சினைகள் அனைத்தும் அடியோடு மறையும்.

ஹஸ்தம்: சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சினை தீரும்.

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ செப்.22- 28 வரை

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x