Published : 29 Sep 2022 06:56 AM
Last Updated : 29 Sep 2022 06:56 AM

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.5 வரை   

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 03-10-2022 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: இந்த வாரம் குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். எதிர்பார்த்த ஒவ்வொரு விசயங்களிலும் நன்மையே கிட்டும்.

எதிரிகளைவிட உடனிருப்போரிடம் கவனம் வையுங்கள். குல தெய்வத்தை வழிபட்டு காரியங்களை வெற்றியுடன் நடத்தி வாருங்கள். தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் செவ்வாய் முக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். அதன் மூலம் நற்பெயர் கீர்த்தி ஏற்படும்.

பெண்கள் உங்கள் சிந்தனை ஒன்று செயல் ஒன்றாக இருக்கும். கலைத்துறையினருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கைநழுவி போகலாம். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு கிடைக்க வேண்டிய பதவி, பொறுப்புகள் உங்களையே வந்தடையும். மாணவர்கள் ஆசிரியரின் நன்மதிப்பை பெறுவீர்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

அசுபதி: சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

பரணி: வேலைப்பளு அதிகரிக்கும்

கிருத்திகை 1ம் பாதம்: இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும்.

பரிகாரம்: முருகனை பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

***********

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு(வ) - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 03-10-2022 அன்று புதன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: இந்த வாரம் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. புத்திசாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உங்களுக்கு லாபம் உண்டாகும். உடல்நிலையில் அவ்வப்போது கவனம் செலுத்த வேண்டி வரலாம்.

சுக்கிர பகவான் சஞ்சாரத்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். தொழிலில் எந்த மாற்றமும் இப்போதைக்கு வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நாளைய பதவி உயர்வை இப்போது எதிர்பார்க்கலாம். சிலர் தேவையான உதவிகளை கேட்டு பெற வேண்டியிருக்கும். பெண்கள் உற்சாகமாக செயல்பட வாய்ப்புள்ளது.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போகிறீர்கள். அரசியல்வாதிகள் கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீர்கள். மாணவர்கள் பொறுமையுடனும், நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். மேற்படிப்பை தொடர முயற்சி செய்யுங்கள்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

ரோஹிணி: அலைச்சல் இருக்கும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.

***********

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்: 03-10-2022 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்: இந்த வாரம் புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். குடும்பத்தில் சில சட்டச் சிக்கல்கள் வந்து போகும். உறவினர் வருகையால் கலகம் உண்டாகும்.

குருபகவான் பார்வை மூலம் உங்கள் பிரச்சினைகள் அகலும். உங்களுக்கு நன்மைகள் ஏராளமாய் நடக்கும். பொருளாதார நிலையில் நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் இப்போது கைக்கு வந்து சேரும். தொழிலில் புதிய யுக்திகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பெண்கள் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். அரசியல்வாதிகள் அரசு சம்மந்தமான பிரச்சனைகளை மற்றவருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்பாலினத்தாரிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்

திருவாதிரை: பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: தெய்வ அனுகூலத்தால் முன்னேற்றம் வந்து சேரும்.

பரிகாரம்: புதன்கிழமையன்று பெருமாளை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ செப்.22- 28 வரை

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x