Published : 25 Aug 2022 02:32 PM
Last Updated : 25 Aug 2022 02:32 PM

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஆக.25 - 31

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் கிரகநிலை - ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சப்தம ஸ்தானத்தில் கேது - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சனி(வ) - விரைய ஸ்தானத்தில் குரு(வ) என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்: இந்த வாரம் குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும். அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். தொழிலில் புதிய குத்தகைகளில் லாபம் கொட்டும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும். வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். பெண்கள் சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள்.

கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பாராட்டு கிடைக்கும். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். ஆசிரியர்களின் பாராட்டைப் பெறலாம். தந்தையின் ஆதரவு கிட்டும்.

பரிகாரம்: முருகனை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும்.

***********

ரிஷபம் கிரகநிலை - ராசியில் செவ்வாய் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் குரு(வ) - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்: இந்த வாரம் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களின் உயரிய எண்ணங்களும், செயல்களும் உங்களுக்கு வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தரும். உங்களின் உடல் ஆரோக்யத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.

சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, சில நேரங்களில் உருவாகலாம். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும்.

பெண்களுக்கு மற்றவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். மாணவர்கள் அடுத்தவர்களை நம்பி ஏமாற வேண்டாம். யாரையும் ஒப்பிட்டு பேச வேண்டாம். பெரியோர்களுக்கு மரியாதை கொடுங்கள்.

பரிகாரம்: முன்னோர்களை வழிபடுவது நல்லது.

***********

மிதுனம் கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்: இந்த வாரம் தேவையான உதவிகள் கிடைக்கும். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். தொழிலில் வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.

பெண்கள் நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். கலைத்துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனச் சிதறல் வேண்டாம். கேளிக்கை போன்றவற்றில் கவனத்தைச் சிதறவிட வேண்டாம். பெரியோர் பேச்சை கேட்டு நடப்பது நல்லது.

பரிகாரம்: காக்கைக்கு தினமும் சாதம் வைத்தல் நல்லது.

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஆக.25 - 31 வரை

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x