Published : 23 Jun 2022 07:51 PM
Last Updated : 23 Jun 2022 07:51 PM

துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 23 - 29

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் கிரகநிலை - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை உள்ளது.

பலன்: இந்த வாரம் மற்றவர்களைப் பற்றி புரிந்து கொள்ள பல சூழ்நிலைகள் உருவாகும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்வர். மாமியார் - மருமகள் உறவு கற்கண்டாய் தித்திக்கும். அதனால் இல்லத்தில் மகிழ்ச்சியே. தொழில்-வியாபாரம் ஏற்றம் தரும் வகையில் இருக்கும். வரவேண்டிய பணம் உங்களைத் தேடி வரும். கவலை வேண்டாம். தேக்கி வைத்துள்ள பொருட்களை விற்பனை செய்ய முற்படுவது நல்லது. நல்ல

வாடிக்கையாளர்கள் கிடைக்கும் சமயமாக இது இருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இருந்து வந்த பனிச்சுமை குறையும். சக பணியாளர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும். வேலை விஷயமாக வெளியூர் வெளிமாநிலங்களுக்கு சென்று வர வேண்டி வரும்.

பெண்கள் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டாம். பெரியோர் பேச்சு கேட்டு நடப்பது சிறந்தது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் பெற்றோர்களிடம் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். கல்வி அல்லாது பிற துறைகளிலும் சாதிப்பீர்கள்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட மனதில் இருக்கும் சங்கடங்கள் நீங்கும்.

***********

விருச்சிகம் கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி(வ) - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

பலன்: இந்த வாரம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிக ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே சுமூகமான உறவு இருக்கும். சிறுவர்களால் ஒரு சில பிரச்சனைகள் தலை தூக்கலாம். அவற்றை பதட்டம் இல்லாமல் சரி செய்ய முயலுங்கள். குடும்பத்துடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள்.

தொழில் - வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகலில் இறங்குவதற்கு கிரக நிலைகள் சாதகமாக உள்ளன. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து உதவிகள் எளிதில் கிடைக்கும். சிறு வியாபாரிகள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். எனினும் சளைக்காமல் கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். சக பணியாளர்கள் உதவுவார்கள்.

பெண்களுக்கு வெளியூர் செல்ல வேண்டி வரலாம். நீண்ட நாட்களாக தேடிய பொருள் ஒன்று கிடைக்கும். விஷேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புவதன் மூலம் உங்கள் மதிப்பு உயரும்.

பரிகாரம்: சுப்பிரமணியருக்கு அரளிமாலை போட்டு வழிபடுங்கள்.


***********

தனுசு கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி(வ) - சுக ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.

பலன்: இந்த வாரம் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு வேலை செய்வீர்கள். ரகசியங்களை காப்பாற்றுவீர்கள். குடும்பம் சுமூகமான சூழ்நிலையில் இருக்கும். வீடு தேடி வந்து உங்களுக்கு நல்வாக்கு சொல்வார்கள். வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் சிலருக்கு வரலாம். மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழிலில் சக பங்குதாரர்களால் இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். உங்கள் பேச்சுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து தொழிலை விரிவுபடுத்துவது பற்றி பேச்சை தொடங்குவார்கள் நன்மையில் முடியும். உத்தியோகத்தில் மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். நிலுவையில் இருந்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.

சில வாய்ப்புகள் உங்களுக்கு தட்டிப்போனதற்கு காரணமாக இருந்தவர்கள் இப்போது உங்களுக்கு நன்மை செய்வார்கள். பெண்கள் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சினை வராது. மாணவர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. ஆசிரியரின் கவனம் உங்கள் மேல் இருக்கும்

பரிகாரம்: சிவன் ஆலயத்திற்குச் சென்று வந்தால் தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன் 23 - 29:

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x