Published : 23 Jun 2022 06:49 PM
Last Updated : 23 Jun 2022 06:49 PM

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 23 - 29

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம் கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி(வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை உள்ளது.

பலன்: இந்த வாரம் உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை நீங்கள் முன்னின்று செய்து முடிப்பீர்கள். குடும்பத்தின் நிதிநிலைமை சரியாக இருப்பதால் தேவையான அனைத்து வசதிகளும் தானாகவே வந்து சேரும். வரன் தேடும் முயற்சிகளில் ஈடுபடுவீர்களேயானால் அதில் வெற்றி நிச்சயம்.

தொழில் பங்குதாரர்களிடமிருந்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் முனைவோர் கேட்ட இடங்களிலிருந்து நிதி உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டிகள் இருந்தாலும் அதைச் சமாளித்து லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலம் உண்டாகலாம். மேலதிகாரிகளின் கிடுக்குப்பிடியில் சிக்கி தவிப்பீர்கள்.

சக வேலையாட்களால் பிரச்சினை ஏற்பட்டால் விட்டுக் கொடுத்து போவது நல்லது. கோபத்தை குறைத்துக் கொள்வது உங்களை பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும். பெண்மணிகள் குடும்ப நிர்வாகத்தை கவனிப்பதில் சிக்கல்கள் இருந்தாலும் அதை திறம்படச் செய்து முடிப்பீர்கள். மாணவ மணிகளுக்கு சந்தோஷமான வாரம். நண்பர்களுடன் இன்பச்சுற்றுலா சென்று வருவீர்கள்

பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து வர வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.


***********

சிம்மம் கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி(வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சூரியன் - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்ரன் என கிரகநிலை உள்ளது.

பலன்: இந்த வாரம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். குடும்பத்தில் தூரத்திலிருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாளைய உறவு ஒன்று இல்லம் தேடி வரும். வீடு, நிலம் போன்றவைகளில் பணத்தை முதலீடு செய்து நல்ல லாபத்தை பெறலாம். மொத்தத்தில் பிரச்சினையில்லா வாரம்.

தொழிலில் இருந்த இடையூறுகளைக் களைவீர்கள். முக்கிய நபர்களை சந்திப்பதை சற்று தள்ளிப்போடுங்கள். உங்களுக்கு சாதகமாகவே உங்களது தொழில் பங்குதாரர் செயல்படுவார். தொழிலாளர்களின் எண்ணங்களை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு அதில் உங்கள் மேல் பொறாமையும், விரோதமும் ஏற்பட வாய்ப்புண்டு.

பழைய கடன்கள் வசூலாகும். அதனால் உங்களுக்கு மனநிம்மதி உண்டாகும். பத்திர விசயத்தில் கவனம் தேவை. பெண்மணிகள் வரவுக்கு ஏற்ற செலவு செய்வது நன்மையைத் தரும். சிலருக்கு கோபம் அதிகமாக வரும். மாணவமணிகள் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: சிவபெருமான் முன் அமர்ந்து வணங்க மனம் ஒருநிலைப்படும்.

***********

கன்னி கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி(வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலை உள்ளது.

பலன்: இந்த வாரம் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடு வரலாம். குடும்பத்தில் தெய்வீக காரியங்கள் அதிகரிக்கும். அதற்கான செலவுகளும் இருக்கும். பிள்ளைகள் உங்களுடன் சேர்ந்து சில நற்காரியங்களைச் செய்வார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். சிரத்தை எடுத்து செய்தால் நல்ல முறையில் திருமணம் நடந்தேறும்.

தொழிலாளர்கள் ஏதாவது பிரச்சினை இருக்குமாயின் அதை முன்னின்று தீர்த்து வைத்து தொழிலை செவ்வனே நடத்திவிடுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள்.

மேலதிகாரிகளின் சில வேலைகளை நீங்கள் முன்னின்று செய்ய வேண்டியதிருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். உடன் பணிபுரிபவர்களுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பெண்கள் உணர்வுப்பூர்வமான முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது. குழந்தைகள் விசயத்தில் மகிழ்ச்சியை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவது நல்லது. பொழுது போக்கு, வேடிக்கை நிகழ்ச்சிகளில் கவனத்தை சிதற விடாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: துளசி மாடத்திற்கு விளக்கேற்றி வர செல்வம் சேரும்.

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன் 23 - 29:

> மேஷம், ரிஷபம், மிதுனம்

> கடகம், சிம்மம், கன்னி

> துலாம், விருச்சிகம், தனுசு

> மகரம், கும்பம், மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x