

மேஷம்: கிரகநிலை - ராசியில் ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி(வ) - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் என கிரகநிலை உள்ளது.
பலன்: இந்த வாரம் உடனிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் வேறொருவர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது குடும்ப நிம்மதிக்கு வழிவகுக்கும். சிலரது பேச்சுகள் விதாண்டவாதமாக இருக்கும். விட்டுக் கொடுத்து செல்வதால் பிரச்சினைகளை முற்றிலுமாக தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்வோர் ஏற்றத்துடன் தொழிலை நடத்துவீர்கள்.
நிலுவையில் உள்ள பழைய பாக்கிகள் வந்து சேரும். தொழிலை விரிவு படுத்துவதற்கான முயற்சிகள் பங்குதாரர்கள் உதவியுடன் சிறப்பாக நடைபெறும். சிக்கன நடவடிக்கைகளை கையாளுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்கள் இப்போது அதற்கான நேரம் தான். உங்களின் கனவு இப்போது நனவாகும். உங்கள் மேலதிகாரியின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
பெண்கள் வேலைக்குச் செல்லும் போது மிக கவனமுடன் சென்று வரவும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். மாணவர்கள் சகமாணவர்களுடன் பழகும் போது கவனமாக இருக்கவும். பிறர் பழிக்கு நீங்கள் ஆளாக நேரலாம்.
பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வந்தால் புது உற்சாகம் பிறக்கும்.
***********
ரிஷபம்: கிரகநிலை - ராசியில் புதன், சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி(வ) - லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகநிலை உள்ளது.
பலன்: இந்த வாரம் வெளியூர் பயணங்களும் அதன் மூலம் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப செலவுகளில் வீண் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. குடும்ப பொறுப்புகளின் காரணமாக கடின உழைப்பு ஏற்படக் கூடும். அதனால் உடற்சோர்வும், அசதியும் ஏற்படும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
தொழிலில் இருந்த சுணக்க நிலை மாறும். உங்களுக்காக உழைப்பவர்கள் இருக்கும் வரையில் உங்களை யாராலும் அசைக்க முடியாது. சிலர் வதந்திகள் மூலம் உங்களை ஏமாற்ற நினைப்பார்கள் ஆனால் நீங்கள் சுதாரிப்பாக இருப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலம் உண்டாகும். வெளியூர் பிரயாணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். சிக்கல்கள் பிறரால் ஏற்பட்டாலும் அதை எளிதில் சமாளித்து விடும் தைரியம் உண்டாகும்.
புதியவண்டி வாகனம் வாங்குவதற்கு யோகம் உண்டாகும். பெண்களுக்கு உயர்வான வாரம் என்றே சொல்ல வேண்டும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரலாம். மாணவ மணிகள் விளையாட்டுகள், போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களைப் பெறுவீர்கள்.
பரிகாரம்: மஹாலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி வர மனம் ஒரு நிலைப்படும்.
***********
மிதுனம்: கிரகநிலை - ராசியில் சூரியன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி(வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சுக்ரன் என கிரகநிலை உள்ளது.
பலன்: இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வர். குடும்பத்தில் பிதுர் ராஜ்ஜிய சொத்துகளால் ஏற்பட்ட பிரிவினை முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினர்கள் விட்டுக் கொடுத்து போவதால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.அனைவரும் ஒன்றாக சுற்றுலா சென்று வருவீர்கள்.
தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சென்ற வாரத்தை விட இந்த வாரம் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கிய நிறுவனங்களின் பங்களிப்பு இருப்பதால் வியாபாரம் பன்மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடலாம். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
வெளிநாடுகளுக்கு செல்ல முனைவோருக்கான தருணம் வந்துவிட்டது. கடல் கடந்து செல்ல வேண்டி வரலாம்.வேலைப்பளுவால் உடல் அசதி ஏற்படும். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம். பெண்கள் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சேமிப்பதில் மிக கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் நண்பர்களுடன் செல்லும் போது கவனமாக இருக்கவும். பெற்றோர் துணையாக இருப்பார்கள்.
பரிகாரம்: விஷ்ணு மந்திரங்களை ஜபித்து வர வாழ்வில் வளம் உண்டாகும்.
அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன் 23 - 29:
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |