

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தகத் திறமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள்.
இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்து வந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்தினர் வருகை இருக்கும். குடும்பப் பிரச்சினைகளில் சாதகமான முடிவே உண்டாகும். பெண்களுக்கு துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு பயணத்தால் அனுகூலம் உண்டு. அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாகப் படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
பரிகாரம்: தினமும் நந்தியம்பெருமானை வணங்கி வர அரசாங்க அனுகூலம் ஏற்படும். எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.
*******************
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
இந்த வாரம் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவக் குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் குருவின் இருப்பால் தேவையான பணவரத்து இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும்.
நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல், காரியங்களில் இழுபறி என்ற நிலையைக் காண்பீர்கள். பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையைத் தரும். சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்துக் கொண்ட காரியங்கள் சுமுகமாக முடியும். குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். வாக்குவாதத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாகக் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் கிட்டும். சுகம் பெருகும். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தனப் போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.
பரிகாரம்: தினமும் நெய் அபிஷேகம் செய்து ஐயப்பனை வணங்கி வர மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
*****************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |