

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
இந்த வாரம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயரும் புகழும் கூடும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கலாம்.
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். புதிதாக வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்கள் திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும். அரசியல்வாதிகளுக்கு அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.
பரிகாரம்: தினமும் சித்தர்களை வணங்க மிகப் பெரிய மாற்றங்களை சந்திக்கலாம். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.
************************
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
இந்த வாரம் வீண் செலவு ஏற்படும். காரியங்களில் தாமதம் உண்டாகும். உடற்சோர்வு மனச் சோர்வு வரலாம். அனைத்தையும் தவிடு பொடியாக்குவீர்கள். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். லாபம் அதிகமாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தடைகள் உடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். எதிர்நோக்கியியிருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.
தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் அகலும். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் விட்டுக் கொடுத்து செல்வது சிறந்தது. பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது.
பரிகாரம்: தினமும் விநாயகரை வணங்கி வர உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.
********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |