துலாம், விருச்சிகம், தனுசு: வார பலன்கள் @ மே 21 - 27

துலாம், விருச்சிகம், தனுசு: வார பலன்கள் @ மே 21 - 27
Updated on
3 min read
துலாம்:
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- பஞ்சம ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் நட்பு வீட்டில் சஞ்சரிக்கிறார். ராசியை செவ்வாய் பகவான் பார்க்கிறார். வீட்டில் நிம்மதியான நிலை காணப்படும். தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார தலங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். தொழிலில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.

முக்கிய முடிவுகளை இப்போது செய்யலாம். சிலர் உங்களைப் பார்த்து பொறாமையாக நினைப்பார்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏதும் இராது. நல்ல சுபிட்ஷமும் சவுபாக்கியமும் உண்டாகும். உடன் பிறந்தோர் உற்ற துணையாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பும், பாசமும் அதிகமாக காணப்படும். தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வெகு தூரத்தில் இருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சில புதிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்குவார்கள். அதிக திறமையுடன் அதை செய்து முடிப்பீர்கள். ஆதலால் நல்ல பேரும், புகழும் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் கிட்டும். மாணவர்கள் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். மனம் விரும்பும் மகிழ்ச்சியான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.

சுவாதி: இந்த வாரம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மன சங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

பரிகாரம்: ஸ்ரீ நரசிம்மர் காயத்ரீ சொல்லி பானகம் நிவேதனம் செய்யுங்கள்.

விருச்சிகம்:
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் சூரியன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் ஆட்சியாக இருக்கிறார். ராசியைப் பார்க்கிறார். நல்ல ஏற்றம் கிடைக்கும். உங்களை முன்னேற்ற வழியில் கொண்டு செல்லும். தொழில் - வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் அதிக நஷ்டம் இல்லாமல் இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்.

அதிக முதலீடுகளை செய்யாமல் இருப்பது அவசியம். குடும்பத்தில் முக்கிய நபர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொருளாதார விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப விழாக்களில் கலந்து கொண்டு நீங்களே இழுத்துப் போட்டு காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும் அதனால் கிடைக்க வேண்டிய ஆதாயங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். பதவி உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெகு விரைவில் சிறந்த இடமாற்றம் கிடைக்கும். பெண்கள் அவ்வளவாக வேலையைச் செய்ய முடியாது. உடல் நிலையில் சோர்வு அதிகமாக காணப்படும். மாணவ-மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சில முயற்சிகள் கூட உங்கள் எதிர்காலத்திற்கு உதவும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.

அனுஷம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த மன வருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பண வரத்து திருப்தி தரும்.

கேட்டை: இந்த வாரம் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.

பரிகாரம்: முருகனை வழிபட்டு குமாரஸ்தவம் சொல்லி வாருங்கள்.

தனுசு:
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் குரு அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு பாராட்டுகள் கிடைக்கலாம். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். சிலர் கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். முக்கிய நபர்களை இந்த காலகட்டத்தில் சந்திக்க வெற்றி உண்டாகும்.

குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அதை சமாளிக்கலாம். நீங்கள் பேசுவதைத் தவறாக புரிந்து கொண்டு உங்களிடம் வாக்கு வாதத்திற்கு குடும்பத்தினர் வரலாம். எனவே வார்த்தைகளில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைப் பளு இருக்கும்.

மேலதிகாரிகளின் வேலையயும் நீங்களே செய்ய வேண்டி இருக்கும். அதிக நேரம் வேலை செய்யும் நிலை உருவாகும். பெண்களுக்கு உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். உங்களுக்குப் பிடித்தவர்களை சந்திப்பீர்கள். அது உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்களுக்கு உதவித் தொகைகள் கிடைக்கும். சிலர் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுத்தொகை வெல்வீர்கள்.

மூலம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பூராடம்: இந்த வாரம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும். உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். புதன் சஞ்சாரத்தின் மூலம் மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும்.

பரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனுக்கு வெண் பொங்கல் நிவேதனம் செய்யுங்கள்.

<div class="paragraphs"><p><em>இந்த வார கிரகங்களின் நிலை</em></p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

துலாம், விருச்சிகம், தனுசு: வார பலன்கள் @ மே 21 - 27
Gangubai Kathiawadi: கருப்பு ரோஜாக்களின் உரிமைக் குரல் கங்குபாய் | திரை தேவதைகள் 17

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in