

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) பலன்கள்: இந்த வாரம் புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரலாம். தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். அரசியல்வாதிகளுக்கு திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பப்பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும்.
சுவாதி: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சினைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலம் கிடைக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.
பரிகாரம்: லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) பலன்கள்: இந்த வாரம் உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள்.
சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். மன நிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். அரசியல்வாதிகள் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள்.
அனுஷம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்டமாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.
கேட்டை: இந்த வாரம் மனோதைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது.
பரிகாரம்: முருகனை வணங்கி வர குடும்ப பிரச்சினை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும்.
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) பலன்கள்: இந்த வாரம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும். உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மனவலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு கூடும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.
மூலம்: இந்த வாரம் சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மனஅமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும்.
பூராடம்: இந்த வாரம் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சங்கடங்கள் சரியாகும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி தருவதாக இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும்.
பரிகாரம்: ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.