

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 25.10.2024 அன்று ராசியில் இருந்து புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் நடைபெறும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சுகஸ்தான செவ்வாயால் சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்து செல்வார்.
தொழில் ஸ்தானத்தை தனாதிபதி செவ்வாய் பார்க்கிறார். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும்.
பெண்களுக்கு மனக் குழப்பம் நீங்கும். கலைத்துறையினருக்கு வீணான குழப்பங்கள் அகலும். அரசியல்வாதிகள் நல்ல பெயர் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. மிகவும் கவனமாக பொருளாதார பிரச்சினைகளை கையாளுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் நிதானமாக பழகுவது நல்லது.
சுவாதி: இந்த வாரம் வீண் அலைச்சல், காரியத் தடை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. மனகுழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். ஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும் செலவாகும்.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் காரிய தாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண்கவலை ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.
பரிகாரம்: லட்சுமியை பூஜித்து வர பொருள் வரத்து கூடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - ராசி ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 25.10.2024 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடச் செய்யும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேலதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். பெண்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும்.
சுக்கிரன் சஞ்சாரத்தால் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் கவனம் தேவை.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள் வீணாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்பு வீணாகும். சம்பளம் தாமதப்படலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
அனுஷம்: இந்த வாரம் குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது.
கேட்டை: இந்த வாரம் மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் உள்ள மந்தநிலை மாற கூடுதல் சிரத்தையுடன் காரியங்களை கவனிப்பது அவசியம். வாழ்க்கை தரம் உயரும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் புதன் - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது | கிரகமாற்றம்: 25.10.2024 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த வாரம் எதிலும் கூடுதல் சிரத்தையுடன் இருப்பது நல்லது. பணவரவு அதிகமாகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படுவீர்கள். உங்களுக்கு பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.
குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருந்தாலும் நல்லபடியாக முடியும்.
பெண்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.
மூலம்: இந்த வாரம் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.
பூராடம்: இந்த வாரம் மனதில் தைரியம் பிறக்கும். வாக்குவன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்க செல்வம் சேரும். மனஅமைதி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |