மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ பிப்.15 - 21

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ பிப்.15 - 21
Updated on
2 min read

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சந்திரன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப் பெறும. கணவன்-மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் நற்செயல்கள் இருக்கும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு தங்களுக்கு தேவயான உதவிகளை கேட்டுப் பெற வருவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் அரசு, தனியார் துறைகளில் உள்ளவர்களும் இது வரை இருந்த ஆடம்பரச் செலவினங்களை தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். தொழிலதிபர்கள் ஊழியர்களின் மிகுந்த ஒத்துழைப்பை பெற்று உற்பத்தியிலும் விற்பனையிலும் தகுந்த மேன்மை பெறுவார்கள்.

பெண்கள் அதிக வேலை வாய்ப்புகளை பெற்று நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். மாணவர்கள் தகுதியான பணிகளைச் செய்யும் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும்.

பரிகாரம்: முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி - லாப ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் பக்குவமான அணுகுமுறையினால் வெற்றி பெறுவீர்கள். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.

தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்: நந்தீஸ்வரரை வணங்குவதன் மூலம் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், சனி - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சந்திரன், குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் நிதான போக்கைக் கடைபிடித்து வெற்றி பெறுவீர்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த இழுபறி அகலும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.

உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in