Last Updated : 14 Sep, 2023 03:38 PM

 

Published : 14 Sep 2023 03:38 PM
Last Updated : 14 Sep 2023 03:38 PM

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ செப்.14 - 20

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு (வ), ராகு - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: வீண்செலவுகள் ஏற்படும் வாரம். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனச்சங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள்.

பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதால் பிணிகள் நீங்கும். காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு (வ), ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: அதிகம் உழைக்க வேண்டிய வாரம். தேவையற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபசெலவுகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலை பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும்.

பெண்களுக்கு வீண்கவலைகள் ஏற்படலாம். எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக பாடங்களை படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்படும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் இருந்து வந்த இறுக்க நிலை அகலும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ), ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும் வாரம். நீண்ட நாட்களாக திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். உடல் ஆரோக்யம் மேம்படும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மனமகிழ்ச்சியடைவார்கள். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகம் ஏற்படும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். அரசியல்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும்.

பரிகாரம்: புதன்கிழமையன்று அம்மனை வழிபடுவது நன்மை தரும்.

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (வ), ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும் வாரம். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல நிலை மாறும். தருமசிந்தனை உண்டாகும்.

தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தாயார் தாய் வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படலாம்.

பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும். அரசியல்துறையினருக்கு பணநெருக்கடி குறையும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: திங்களன்று விரதம் இருந்து அம்மனை தீபம் ஏற்றி வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சூர்யன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ), ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: அறிவுரை தேவைப்படும் வாரம். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.

எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை.

நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம். பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும்.

பரிகாரம்: ஞாயிறு அன்று விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ), ராகு - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: மறைமுக எதிர்ப்புகள் நீங்கும் வாரம். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்குவன்மையால் நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு, வீண் அலைச்சல் குறையும். அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு நிதி உதவி கிடைக்கும். அரசியல்துறையினருக்கு அரசாங்கம் மூலம் சாதகமான உதவி கிடைக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை அன்று ஸ்ரீஐயப்பனை வணங்கி வர தடங்கல்கள் அகலும்.

துலாம் ( சித்திரை 3, 4 பாதங்கள் , சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - சுக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு (வ), ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: வீண் வாக்குவாதம் ஏற்படும் வாரம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். பழைய வீட்டை புதுப்பிப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். வாகன வசதி ஏற்படும். பெண்களுக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

மாணவர்களுக்கு பதற்றம் கொள்ளாமல் நிதானமாக பாடங்களை படிப்பது நல்லது. ஆசிரியர்களால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். அரசியல்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீகாளியம்மனை வணங்கி வலம் வந்தால் தொழிலில் ஏற்றம் ஏற்படும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு (வ), ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: தடைபட்டிருந்த பணவரத்து வந்து சேரும் வாரம். உடல் ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். தேவையான உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகலாம்.

சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு செலவுகள் கூடும். அரசியல்துறையினருக்கு பேச்சில் நிதானம் அவசியம்.

பரிகாரம்: செவ்வாயன்று விரதம் இருந்து முருகனை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். நன்மை ஏற்படும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ), ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: பொறுப்புகள் அதிகரிக்கும் வாரம். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். உறவினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரலாம்.

காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அரசியல்துறையினருக்கு நிலுவையில் உள்ள பணம் வரும். கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று பெருமாளை வணங்க வாழ்வு வளம் பெறும்.

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு (வ), ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் வாரம். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். எந்த காரியத்திலும் விட்டு கொடுத்துச் செல்வது நல்லது.

தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும். அரசியல்துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும்.

பரிகாரம்: திங்களன்று அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று பாலபிஷேகம் செய்து வணங்கி வர நன்மைகள் ஏற்படும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ), ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும் வாரம். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் பதற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. பெண்கள் அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் பலன் தரும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

பரிகாரம்: தினமும் ராம நாமம் ஜெபித்து வருவதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ), ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும் வாரம். மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது.

வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக ஆலோசனைகள் செய்வீர்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமையன்று அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று வலம் வருவதன் மூலம் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x