

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு (வ), ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.
கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் வாரம். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். எந்த காரியத்திலும் விட்டு கொடுத்துச் செல்வது நல்லது.
தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும். அரசியல்துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும்.
பரிகாரம்: திங்களன்று அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று பாலபிஷேகம் செய்து வணங்கி வர நன்மைகள் ஏற்படும்.
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ), ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.
கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும் வாரம். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் பதற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. பெண்கள் அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் பலன் தரும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் வாக்குவாதம் ஏற்படலாம்.
பரிகாரம்: தினமும் ராம நாமம் ஜெபித்து வருவதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் மறையும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ), ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.
கிரகமாற்றம்: 17-09-2023 அன்று சூரியன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும் வாரம். மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது.
வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.
மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக ஆலோசனைகள் செய்வீர்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமையன்று அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று வலம் வருவதன் மூலம் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |