Published : 11 Apr 2021 10:29 am

Updated : 11 Apr 2021 10:30 am

 

Published : 11 Apr 2021 10:29 AM
Last Updated : 11 Apr 2021 10:30 AM

புனர்பூசம், பூசம், ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 12 முதல் 18ம் தேதி வரை)

vaara-natxhatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வாசகர்களுக்கு என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.


உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறவும், தடைகள் அகன்று முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஆண்டாகவும் இந்தப் பிலவ புத்தாண்டு அமைய வேண்டும் என முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்.

புனர்பூசம் -

நினைத்தது நிறைவேறும் வாரம். பணவரவு சரளமாக இருக்கும்.

முயற்சி செய்து பாதியில் நின்ற அனைத்துப் பணிகளும் இப்போது படிப்படியாக நிறைவேறும். அந்த முயற்சிகளின் மூலம் ஆதாயத்தையும் அடைவீர்கள்.
சொத்துச் சேர்க்கை ஏற்படும். விற்க முடியாமல் இருந்த சொத்துகள் விற்பனையாகும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றத்தைக் காணலாம். தேவையான முதலீடுகள் கிடைக்கும்.

இப்போது மிகச்சிறப்பான முன்னேற்றத்தையும் வருமானத்தையும் காணலாம். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

புதிய வியாபார தொடர்புகள் கிடைக்கும். பெண்களுக்கு இதுவரை இருந்த உடல்நல பாதிப்புகள் முற்றிலுமாக விலகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இந்த வாரம் புத்திர பாக்கியம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு இந்த வாரம் புதிய ஒப்பந்தம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
திருப்திகரமான வருமானம் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலை இன்று எளிதாக முடியும்.

செவ்வாய் -
முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவில் வெற்றியைக் காணலாம். பண வரவுகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை இருக்கும்.

புதன் -
மனதில் உற்சாகம் பிறக்கும். எடுத்துக்கொண்ட வேலைகளில் மன திருப்தி உண்டாகும். பணவரவு சரளமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. சுபகாரிய விசேஷங்கள் முடிவாகக் கூடிய நாள். தொழில் தொடர்பான முதலீடுகள் உறுதியாகும்.

வியாழன் -
திட்டமிடாத காரியங்களிலும் சாதிக்கக் கூடிய நாள். பணம் பலவழிகளிலும் வரும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்டநாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் மிக எளிதாக முடியும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட விசேஷ உங்கள் முடிவாகும்.

வெள்ளி -
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் சாதகமாக இருந்தாலும், அதிக கவனத்தைச் செலுத்த வேண்டிய நாள். எச்சரிக்கை உணர்வு மிக மிக அவசியம். பணத்தைக் கையாளும்போது கவனம் தேவை. விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போதும் அதிக எச்சரிக்கை உணர்வு வேண்டும். போக்குவரத்தில் சிந்தனைகளை சிதறவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

சனி -
தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையைச் செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான வாய்ப்புகளால் மன நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். சகோதரர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். தேவையான உதவிகளைச் செய்து தருவார்கள். பாகப்பிரிவினைகள் தொடர்பான விஷயங்கள் சுமுகமாக பேசி முடிக்கப்படும்.

ஞாயிறு -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். கலைத்துறையினருக்கு நண்பர்களால் ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீநிவாச பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுங்கள், மிகச் சிறந்த நன்மைகளை உண்டாக்கும்.
****************

பூசம் -

அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும்.

புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீரும். ஆரோக்கியத்தில் இருந்த அச்சம் முழுமையாக விலகும்.

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் அகலும். அலுவலகத்தில் பதவி உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும் அல்லது அது பற்றிய நல்ல தகவல் கிடைக்கும்.

வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மனமகிழ்ச்சி தரும் விதமாக வந்து அமையும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். முன்னேற்றமான தகவல் கிடைத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

செவ்வாய் -
அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு எதிராகத் திரும்பும். அலுவலகத்திலும், அக்கம் பக்கத்திலும் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. கை பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

புதன் -
சிறப்பான பலன்கள் நடைபெறும் நாள். தேவைகள் பூர்த்தி ஆகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் இன்று ஈடுபட முன்னேற்றம் ஏற்படும். வியாபார விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. சுபவிசேஷங்கள் முடிவாகும். அதிகப்படியான நன்மைகளும் யோகங்களும் கிடைக்கக்கூடிய நாள்.

வியாழன் -
மனதில் நிம்மதியும் நம்பிக்கையும் பிறக்கும். அதிக நன்மைகள் ஏற்படும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடன் உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கக் கூடிய நாள். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆதாயம் பெருகும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள். வாகன மாற்றும் சிந்தனைஉருவாகும், அல்லது புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

சனி -
இதுவரை முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.

ஞாயிறு -
பொறுமையும் நிதானமும் அவசியம். பேசுகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. உங்கள் கருத்திலேயே பிடிவாதமாக இருக்க வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களோடு வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீதட்சிணாமூர்த்தி குரு பகவான் வழிபாடு செய்யுங்கள். குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**************

ஆயில்யம் -

நினைத்தது அனைத்தும் நடக்கும் வாரம். பணவரவுகள் தாராளமாக இருக்கும்.

இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

தாயாரின் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும், அல்லது இப்போது இருக்கும் வியாபார இடத்தை விரிவுபடுத்துவதற்குத் தேவையான பண உதவி கிடைக்கும். பெண்களுக்கு சுய தொழில் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
தாமதமான புத்திர பாக்கியம் இப்போது உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் பெண் நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி இன்று கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் மனநிம்மதியை தரும். அலுவலகப் பணிகளில் மனநிறைவு உண்டாகும்.

செவ்வாய் -
எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நிதானத்தை கடைப் பிடித்தால் பிரச்சினைகளை தீர்க்க முடியும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

புதன் -
செயல்களில் நிதானம் தேவை. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஒரு சிலருக்கு சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்கவேண்டும். நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.

வியாழன் -
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். திருமணம் தொடர்பான தகவல் உறுதியாகும். திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

வெள்ளி -
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி -
அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்தும் நாள். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணிகள் அனைத்தையும் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

ஞாயிறு -
அதிக நன்மைகள் ஏற்படக் கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். நண்பர்கள் தொழில் தொடர்பான உதவிகளைச் செய்து தருவார்கள். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!



புனர்பூசம்பூசம்ஆயில்யம்; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 12 முதல் 18ம் தேதி வரை)ஆயில்யம்வார நட்சத்திர பலன்கள்பலன்கள்நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்PalangalNatchatira palangalVaara natxhatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x