Published : 28 Feb 2021 18:01 pm

Updated : 28 Feb 2021 18:01 pm

 

Published : 28 Feb 2021 06:01 PM
Last Updated : 28 Feb 2021 06:01 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - வார நட்சத்திர பலன்கள் - மார்ச் 1 முதல் 7ம் தேதி வரை

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

பூரட்டாதி -


முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் வாரம்.

குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். சகோதரர்களிடம் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும்.

ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாற முயற்சி சாதகமாக இருக்கும்.

தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். அயல்நாட்டு நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.

வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரம் தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும்.
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடு மனை தொடர்பான சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடியே நடக்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் பேசி தீர்க்கப்படும். வருமானத்திற்கு குறைவு இருக்காது. வியாபாரிகளுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக சிறு தூரப் பயணங்கள் ஏற்படும். புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பும் அதன் மூலம் ஆதாயமும் உண்டாகும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகள் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன்-
அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து, மற்றவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவு எடுக்க வேண்டும். வீண் விவாதங்கள், உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடுவது போன்றவை தவிர்க்க வேண்டும்.

வியாழன்-
வரவும் செலவும் சமமாக இருக்கக்கூடிய நாள். செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு தெரியாது. கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பழைய பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

வெள்ளி-
பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். பேச்சுவார்த்தைகளில் கவனமாக இருக்கவேண்டும். தொழில் தொடர்பாக புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் கவனமாக இருங்கள். தேவையற்ற விவாதங்களைச் செய்ய வேண்டாம்.

சனி-
மனதை வருத்திக் கொண்டிருந்த முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரம் தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும்.

ஞாயிறு-
குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலுக்குத் தேவையான சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள். மகா லட்சுமி தாயாருக்கு வெண்தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*************

உத்திரட்டாதி -

மன நிறைவு மன நிம்மதியும் உண்டாகும் வாரம்.

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சொத்து விஷயங்களில் பிடிவாதமாக இருக்க வேண்டாம். பணவரவும், எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகும்.

அலுவலகப் பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியில் ஈடுபடுவார்கள். அந்த முயற்சி சாதகமாக இருக்கும்.

வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். தொழிலில் தேங்கி நின்ற பொருட்களெல்லாம் விறுவிறுப்பாக விற்றுத் தீரும்.

ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெண்களுக்கு சிறப்பான நன்மைகள் நடக்கும்.

ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆனாலும் ஒப்பந்தங்களை ஏற்கும் முன் முழுமையாக மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நீண்ட நாட்களாக வசூலாகாத பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது ஏற்படும். செலவுகள் எதிர்பாராத அளவிற்கு இருக்கும். அலுவலகம் மற்றும் பணிபுரியும் இடங்களில் வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம்.

புதன்-
வரவும் செலவும் சமமாக இருக்கும். நீண்ட நாளாக மனதை வருத்திக் கொண்டு இருந்த பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

வியாழன்-
அலுவல வேலையில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

சனி-
செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பேசும்போது கவனமாக இருங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள். அவர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்கள் செய்து கொண்டிருக்க வேண்டாம்.

ஞாயிறு-
எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ ஆஞ்சநேய பெருமானுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
****************

ரேவதி -

எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும்.

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒரு சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குறிப்பாக சொத்து தொடர்பான விஷயங்களில் அனுசரித்துச் செல்லுங்கள்.

வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபார இடத்தை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

தொழில் தொடர்பாக எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முன்னேற்றத்தை தருவதாக இருக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் முடிவாகும். புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். சுயதொழில் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு தருவார்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகளுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் வேலையை பார்க்க வேண்டியது வரும் அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.

புதன்-
திட்டமிட்டு காரியங்களை வகைப்படுத்தி வெற்றி காண்பீர்கள். வாழ்க்கைத் துணையின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

வியாழன்-
மனம் மகிழும் சம்பவங்கள் ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சி மன நிறைவைத் தரும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் தாமாகவே தேடி வரும் அரசு சலுகைகளும் உதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது . தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தைத் தரும். மொத்தத்தில் மகிழ்ச்சிகரமான நாள்.

வெள்ளி-

குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

சனி-
குடும்பத்தில் முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள். அலுவலக வேலைகளில் தீவிர கவனம் செலுத்தி செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

ஞாயிறு-
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அக்கம்பக்கத்தினருடனும், நண்பர்களுடனும் தேவையற்ற வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். செலவுகள் அதிகமாக ஏற்படும் நாள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள், விநாயகர் அகவலைப் பாராயணம் செய்து வாருங்கள், நன்மைகள் நடக்கும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!



பூரட்டாதிஉத்திரட்டாதிரேவதி - வார நட்சத்திர பலன்கள் - மார்ச் 1 முதல் 7ம் தேதி வரைரேவதிபலன்கள்வார பலன்கள்வார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்PoorathadhiUtthiratadhiRevathiPalangalVaara palangalVaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x