Published : 07 Feb 2021 20:20 pm

Updated : 07 Feb 2021 20:20 pm

 

Published : 07 Feb 2021 08:20 PM
Last Updated : 07 Feb 2021 08:20 PM

திருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; பிப்ரவரி 8 முதல் 14ம் தேதி வரை

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

திருவோணம் -


திட்டங்கள் வகுத்து அதன்படி செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பணவரவு மனநிறைவைத் தரும். முயற்சிகளில் எதிர்பாராத அளவிற்கு நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். சகோதரர்களுடன் இணக்கமாக இருந்தால் நன்மைகளைப் பெறுவீர்கள்.

கடன் தொடர்பான பிரச்சினைகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அலுவலக வேலையில் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட நல்ல விஷயங்கள் நடக்கும். சுய தொழில் தொடங்கும் முயற்சியில் இருக்கும் பெண்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சி பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
சிறப்பான நாள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

செவ்வாய்-
தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக திடீர் பயணம் ஒன்று ஏற்படும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைத் தரக் கூடியதாக இருக்கும். ஒப்பந்தங்கள் நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் இன்று உறுதியாகும்.

புதன்-
எண்ணங்கள் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நன்மைகள் நடக்கும். பெண்களுக்கு சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன்-
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். எதிலும் அவசரப்படக்கூடாது. ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வெள்ளி-
வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நடைபெறும். எதிர்பார்த்த தொழில் முதலீடு கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

சனி-
தொழில் தொடர்பான சந்திப்புகளில் இழுபறி நீடிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் மேலும் தள்ளிப்போகும். ஆரோக்கியப் பிரச்சினைகளில் முன்னேற்றம் காணலாம். மருத்துவச் செலவுகள் குறையும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதன் மூலமாக செலவுகள் ஏற்படும்.

ஞாயிறு-
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உறவினர்கள் வருகை ஏற்படும். சுப விசேஷங்கள் முடிவாகும். தாமதப்பட்டு வந்த திருமணத்திற்கு இன்று நல்ல முடிவு ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
*******************

அவிட்டம் -

நன்மைகள் நடக்கும் வாரம் இது.

தேவையான பணவரவு சரளமாக இருந்துகொண்டே இருக்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்போடு புதிய வியாபாரம் தொடங்குவது அல்லது சுயதொழில் தொடங்குவது போன்றவற்றைச் செய்வதற்கு முற்படுவீர்கள்.

நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த முக்கியமான தகவல் ஒன்று இந்த வாரம் கிடைக்கும். மன மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு.

ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். பணியிடத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வரும், ஆனாலும் உங்களுடைய திறமையால் அனைத்தையும் சமாளித்து விடுவீர்கள். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும்.

அயல்நாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. புதிய நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றவும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உண்டு.

பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். சொத்துச் சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு.

கலைஞர்களுக்கு புதிய நண்பர்கள் அறிமுகம் நடந்து அவர்கள் மூலமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -
திங்கள்-

பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். நிதானத்தை இழக்கக்கூடாது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகத்தின் சக ஊழியர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம். வியாபார சந்திப்புகள், தொழில் ரீதியான சந்திப்புகள் என எது இருந்தாலும் அதைத் தள்ளி வைக்கவேண்டும்.

செவ்வாய்-
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். பணவரவு சரளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

புதன்-
திட்டமிட்டு செயல்பட்டு பல காரியங்களைச் சாதித்துக் காட்ட வேண்டிய நாள். பணவரவு சரளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பாக ஏற்படும் சந்திப்புகள் மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும். சுபவிசேஷங்கள் பற்றிய தொலைபேசி வழித் தகவல் கிடைத்து மன நிம்மதி பெறுவீர்கள்.

வியாழன்-
எடுத்துக் கொண்ட அனைத்துப் பணிகளையும் செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். அலுவலகப் பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் சிறு தூர பயணத்தால் ஆதாயம் உண்டு.

வெள்ளி-
தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து விடவேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சனி-
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். வங்கியில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். முக்கியமான நபர்களின் சந்திப்பு ஏற்படுவதால் மன மகிழ்வு ஏற்படும்.

ஞாயிறு-
நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளின் திருமண முயற்சிகளில் சாதகமான பதில் கிடைக்கும். நண்பர்கள் மூலம் வியாபார விஷயங்களில் ஆதாயங்கள் கிடைக்கும். கமிஷன் மற்றும் தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு குறிப்பிடத் தகுந்த வருமானம் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியை வணங்குங்கள். அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
******************************

சதயம் -

எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

பணவரவு தாராளமாக இருக்கும். ஒரு சில விஷயங்களில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். கடும் மன உளைச்சலை கொடுத்துக் கொண்டிருந்த குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். குறிப்பாக சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டிருந்த தகராறுகள் நீங்கும்.

சகோதரர்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாக பிரச்சினையைத் தீர்க்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் அதன் பாதிப்பு தெரியாது.

தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய கிளைகளை ஆரம்பித்தல், வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவது போன்ற செயல்களில் இறங்கி வெற்றி காண்பார்கள்.

தொழில் தொடர்பாக எடுக்கும் எந்த முயற்சியிலும் முன்னேற்றத்தைக் காணலாம். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். முதலீடுகள் எதிர்பார்த்தவர்களுக்கு இந்த வாரம் முதலீடுகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

பெண்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
திட்டமிட்ட காரியங்களிலும் திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும்.

செவ்வாய்-
பணவரவு சரளமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன்-
தாமதப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சிறிய அளவிலான சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான விஷயங்கள் நடக்கும்.

வியாழன்-
வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். வாகன மாற்றுச் சிந்தனை ஏற்படும். மனதில் கடந்த சில நாட்களாக இருந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும்.

வெள்ளி-
எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சனி-
பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழியுங்கள். வீண் விரயங்கள் ஏற்படும். கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும்.

ஞாயிறு-
சொத்துகள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் பற்றிய நல்ல தகவல் இன்று உறுதியாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!



திருவோணம்அவிட்டம்சதயம்; வார நட்சத்திர பலன்கள்; பிப்ரவரி 8 முதல் 14ம் தேதி வரைசதயம்வார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்ThiruvonamAvittamSathayamVaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x