Published : 07 Feb 2021 05:07 PM
Last Updated : 07 Feb 2021 05:07 PM

மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள்; பிப்ரவரி 8 முதல் 14ம் தேதி வரை

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மகம் -

அதிக உழைப்பும் அந்த உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கக்கூடிய வாரம்.

பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

திருமணத் தேதி குறிக்கும் வாய்ப்பு உள்ளது. சொத்துகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பாதியில் நின்ற கட்டடப் பணிகள் தொடரும். புதிதாக வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும்.

வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வெளிநாடு தொடர்பு உடைய தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

இந்த வாரம் -
திங்கள் -

முயற்சிகளில் முன்னேற்றமான தகவல்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

செவ்வாய் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு சுய தொழில் தொடர்பான வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும்.

புதன் -
எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது.


வியாழன் -
இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் உள்ளன. வியாபார விஷயங்கள் சுமுகமாக நடைபெறும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி -
குடும்ப நலன் சார்ந்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்காலத் தேவைகளுக்காக சேமிக்கும் எண்ணம் தோன்றும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சனி -
பணவரவு இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபார விஷயங்கள் லாபகரமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

ஞாயிறு -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையில்லாத வாக்குவாதங்கள், மன வருத்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீதுர்கை அன்னையை வணங்குங்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
**********************

பூரம் -

முயற்சிகளால் வெற்றி காண வேண்டிய வாரம்.

தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். குடும்ப உறவுகள் பலப்படும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
பணியில் இருப்பவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும். மறைமுகமாக தொல்லை தந்தவர்கள் அடங்கிப் போவார்கள்.

சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழிலில் லாபம் அபரிமிதமாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபார இடங்களில் பணிபுரிபவர்களுக்கு வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியும் சாதகமாக இருக்கும்.

பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். தாமதப்பட்டு வந்த திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் அதிகமாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் நெருங்கிய நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -

நன்மைகள் அதிகமாக நடைபெறக்கூடிய நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

செவ்வாய் -
வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். சொத்துகள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் முன்னேற்றம் தருவதாக இருக்கும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சிறிய அளவிலான ஆரோக்கிய அச்சுறுத்தல் வந்து போகும்.

புதன் -
எந்த விஷயத்திலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானமாகச் சிந்தித்து செயல்படுங்கள். பணச்செலவு அதிகமாக ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வியாழன் -
பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வீடு மாற்றம் வாகன மாற்றம் போன்றவை ஏற்படும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடு தொடர்பு உடைய தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

சனி -
வியாபார விஷயமாக பயணங்கள் ஏற்படும். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். நண்பர்களோடு இணைந்து புதிய வியாபாரம் தொடங்குவது பற்றிய சிந்தனை ஏற்படும். அது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள்.

ஞாயிறு -
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு குடும்ப உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சகஸ்ர நாமம் கேளுங்கள். நினைத்தது நடக்கும்.
*******************

உத்திரம் -

அதிக அளவிலான நன்மைகள் ஏற்படும். விரும்பிய செயல்களை விரும்பியபடி செய்து முடிப்பீர்கள்.

புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தில் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். ஏற்கெனவே சொந்த வீடு உள்ளவர்களுக்கு வங்கிக் கடன் தொடர்பான பிரச்சினைகளில் சாதகமான நன்மைகள் நடக்கும்.

தொழில் தொடர்பான உதவிகள் பெருமளவு கிடைக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு நிம்மதி தரும்.

உற்பத்தியான பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு இப்போது உடனடியாக கிடைக்கும்.

வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -

சொத்துகள் தொடர்பாக அதாவது வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். வியாபார விஷயங்கள் அனைத்தும் லாபம் தரக் கூடியதாக இருக்கும்.

செவ்வாய் -
அலுவலகத்தில் அடுத்தவர்கள் பணியைச் செய்ய வேண்டியது வரும். தொழில் தொடர்பாக அலைச்சல்கள் ஏற்படும். வியாபார விஷயங்களில் இழுபறி இருக்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும்.

புதன் -
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை தொடர்பான தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும்.

வியாழன் -
எந்த விஷயத்திலும் பொறுமையாக இருப்பது நல்லது. அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம். வியாபார விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையைக் கையாள வேண்டும். கையாளும் பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும்.

வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பணவரவு இன்று கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் இருந்த அழுத்தங்கள் குறையும். கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும்.

சனி -
நீண்ட நாளாகவே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒப்பந்தம் இன்று நிறைவேறும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பண உதவி இன்று கிடைக்கும். தரகு மற்றும் கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு மன நிறைவான வருமானம் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீசிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள். நன்மைகள் நடக்கும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x