Published : 07 Feb 2021 03:34 PM
Last Updated : 07 Feb 2021 03:34 PM

அஸ்வினி, பரணி, கார்த்திகை;  வார நட்சத்திர பலன்கள் - (பிப்ரவரி 8 முதல் 14ம் தேதி வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


அஸ்வினி -

எதிர்பார்த்த நன்மைகள் எதிர்பார்த்தபடியே ஏற்படும் வாரம்.

குடும்பத்தில் கடந்த சில நாட்களாக இருந்த புகைச்சல் மறையும். சமாதானம் ஏற்படும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வார்கள்.
குழந்தைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாய் தந்தையரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெற்றோரின் உதவிகள் கிடைக்கும். சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும்.

குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். திருமணமான தம்பதியருக்கு புத்திர பாக்கியம் தொடர்பான தகவல் உறுதியாகும்.

சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது நனவாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட சிறப்பான நேரம் இது. சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தயக்கத்தை உதற வேண்டும். துணிச்சலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நிறுவனங்களோடு தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் தேடி வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும் அது தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

செவ்வாய் -
இரட்டிப்பு வருமானம் கிடைக்கக்கூடிய நாள். எந்த ஒரு முயற்சியிலும் ஆதாயம் உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

புதன் -
செயல்களில் நிதானம் தேவை. எந்த ஒரு காரியத்திலும் பொறுமை அவசியம். செலவுகள் எதிர்பாராத விதமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

வியாழன் -
வியாபார விஷயங்கள் சுமுகமாக நடைபெறும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி -
வெகு இயல்பான நாளாக இருக்கும். அலுவலகப் பணிகளில் சற்று அழுத்தம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிப்பது நல்லது.

சனி -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபார விஷயங்கள் லாபகரமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். தொழிலில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நீங்கும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். உற்ற நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
கலைவாணி ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்ளுங்கள். நன்மைகள் பெருகும்.
****************

பரணி -

சிறப்பான பலன்கள் நடைபெறக்கூடிய வாரம்.

தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்க உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட முன்னேற்றத்தைக் காண முடியும். குடும்ப உறவுகள் பலமாக இருக்கும்.

கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளில் சுமுகமான முடிவு எட்டப்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.

அலுவலக வேலைகளை சக ஊழியர்களுடன் பகிர்ந்து செய்து முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அபரிமிதமாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் வியாபாரத்தோடு இணைந்த மற்றொரு வியாபாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது. சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது பலவித ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். புத்திர பாக்கியத்திற்காக மருத்துவச் செலவு செய்ய வேண்டிய நிலை இனி இருக்காது.

மாணவர்களின் கல்வியில் சீரான வளர்ச்சி இருக்கும். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
நல்ல பலன்கள் நடைபெறக் கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது அல்லது பயணத் திட்டங்கள் வகுக்க வேண்டியது வரும்.

செவ்வாய் -
எண்ணங்கள் செயலாகும் நாள். புதிய திட்டங்கள் தீட்டி செயல்படுத்த முற்படுவீர்கள். பயணங்கள் ஏற்படும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைத் தரும். அலுவலகப் பணிகள் சிறப்பாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.


புதன் -
எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும் நாள். வருமானம் இரட்டிப்பாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் உண்டாகும்.

வியாழன் -
அவசர முடிவுகள் எடுக்கக்கூடாது. நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். பொருட்களைக் கையாளும்போது எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

வெள்ளி -
பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். தொழில் தொடர்பாக நல்ல சந்திப்புக்கள் ஏற்படும். முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வியாபாரம் தொடர்பாக நீண்ட நாளாக வராமலிருந்த பணம் வந்துசேரும். சகோதர உறவுகளுக்கு திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

சனி -
குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி லாபமும் கிடைக்கும். தாய் மாமன் வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்.

ஞாயிறு -
பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு குடும்ப உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ விநாயக பெருமானை வழிபாடு செய்யுங்கள். நினைத்தது நடக்கும்.
***********************

கார்த்திகை -

அதிக அளவிலான நன்மைகள் ஏற்படும் வாரம்.

தேவைகள் பூர்த்தியாகும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் இருக்காது. சேமிப்பு உயரும். கடனில் ஒரு பகுதி அடையும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை நல்ல வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.

வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறையும் கூடுதல் கவனமும் செலுத்தவேண்டும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

செவ்வாய் -
அலுவலக வேலைகளில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். இருந்தாலும் எந்த ஒரு வேலையிலும் நிதானமாகச் செயல்படுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

புதன் -
நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். எந்த முயற்சியாக இருந்தாலும் முழு வெற்றியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

வியாழன் -
எந்த விஷயத்திலும் பொறுமையாக இருப்பது நல்லது. அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபார விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும்.

வெள்ளி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பணவரவு இன்று கைக்கு வந்து சேரும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழில் தொடர்பாக பயணங்கள் ஏற்படும். அந்தப் பயணத்தின் மூலம் ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

சனி -
தொலைபேசி வழியாக நல்ல தகவல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.

ஞாயிறு -
பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் பழுதடைந்த பொருட்களை மாற்றவும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணிகளில் இருந்த வேலைகளையும் இன்று செய்து முடிப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சூரிய வழிபாடு செய்யுங்கள். ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தோஷங்கள் நிவர்த்தியாகும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x