Published : 27 Dec 2020 18:16 pm

Updated : 27 Dec 2020 18:16 pm

 

Published : 27 Dec 2020 06:16 PM
Last Updated : 27 Dec 2020 06:16 PM

மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (டிசம்பர் 28 முதல் - ஜனவரி 3ம் தேதி வரை) 

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்களுடைய நல்ல எண்ணங்கள் முருகப்பெருமான் அருளால் நிறைவேறட்டும்.


மகம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். ஆரோக்கிய பாதிப்புகள் முற்றிலுமாக விலகும்.

கடன் பிரச்சினை தீர்வதற்கு வழிவகைகள் கிடைக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்பு தந்து கொண்டிருந்த சக ஊழியர்கள் விலகிச்செல்வார்கள்.

தொழிலில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சேவை சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வாடிக்கையாளர் மூலமாகவே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள்.

பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். விரும்பிய கல்வி கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்கக் கூடிய நாள். ஆதாயம் அதிகமாக இருக்கும். எதிர்பாராத வருமானங்கள் ஒரு சிலருக்கு கிடைக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கக்கூடிய நாள்.

செவ்வாய் -
மனதை வருத்திக் கொண்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும் பதவி உயர்வு தொடர்பான தகவல் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கமிஷன் தொழிலில் லாபம் இருமடங்காக இருக்கும்.


புதன் -
தேவையற்ற விவாதம் செய்யாதீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணியை மட்டும் செய்யுங்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். குடும்பத்தினரிடம் இணக்கமாக இருங்கள். பயணங்கள் ஏதும் செய்ய வேண்டாம்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்களில்ள் நல்ல முடிவு கிடைக்கும்.

வெள்ளி -
மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. ஆடம்பரச் செலவுகள் ஏற்படும். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

சனி-
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத பணவரவு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு -
அதிக நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்டு வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய நபர்களின் சந்திப்பு நம்பிக்கை தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சிவாலயத்தில் ஸ்ரீ பரமேஸ்வரி அன்னையை வணங்குங்கள். நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும்.
***************

பூரம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம்.

தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய வியாபார முயற்சிகளில் ஈடுபட ஆர்வம் காட்டுவீர்கள். அதேபோல புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் அதிகம். தேவையான உதவிகளும் கிடைக்கும்.

அலுவலகத்தில் இயல்பான நிலை இருக்கும். உங்களுடைய பணிகளில் ஏற்பட்ட தொய்வு நிலை மாறி சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.

எதிர்பார்த்த லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் அல்லது வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். சகோதரர்களுக்கு திருமணம் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒப்பந்தம் ஒன்று கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வங்கியில் தொழில் தொடர்பாக கடன் கிடைக்கும். வியாபார பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். அலுவலகப் பணிகளில் அழுத்தங்கள் குறையும்.

செவ்வாய்-
பொறுமையோடு நிதானத்தையும் கடைபிடிக்கவேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தொழில் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள்.

புதன் -
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மன தைரியத்தோடு எதிர்கொண்டால் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான நிலை தொடரும்.

வியாழன் -
அதிக அளவு நன்மைகள் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
மனதிற்கு உற்சாகம் தரக்கூடிய தகவல்கள் கிடைக்கும். மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது. குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் மட்டுமல்லாமல் ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. மாலை நேரத்தில் சிறிய அளவில் மகிழ்ச்சியான செலவுகள் ஏற்படும்.


சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக சந்திப்புகள் ஏற்படும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அன்னையை வணங்குங்கள். திருப்பாவை பாராயணம் செய்யுங்கள். நன்மைகளை அதிகப்படுத்தித் தரும்.
***************

உத்திரம் -

சிறப்பான பலன்கள் நடைபெறும் வாரம்.

குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதர சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். உங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து தரக் கூடிய அளவில் இருப்பார்கள்.

சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாகும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். நீண்டநாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்கும் வாய்ப்பும் உள்ளது. அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய வியாபார கிளைகள் ஆரம்பிப்பார்கள்.
வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
இயல்பான நாளாக இருக்கும். பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. பணவரவு தாமதமாகலாம். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும்.

செவ்வாய்-
நேற்றைய தினம் கிடைக்க வேண்டிய உதவிகள் அனைத்தும் இன்று கிடைக்கும். தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

புதன் -
அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.சக ஊழியர்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்க வேண்டாம். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை நீடிக்கும். வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சற்று தள்ளிப் போகும். குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி-
சிறப்பான மகிழ்ச்சிகளைத் தரக்கூடிய நாளாக இருக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும்.

சனி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். அலுவல் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். நண்பர்களிடம் கொடுத்திருந்த கடன் திரும்பக் கிடைக்கும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சுமுகமான முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். கலைஞர்களுக்கு பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவ வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது மேலும் நல்ல பலன்களைத் தரும்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!



மகம்பூரம்உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (டிசம்பர் 28 முதல் - ஜனவரி 3ம் தேதி வரை)உத்திரம்வார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்PooramMagamUthiramVaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x