Published : 22 Nov 2020 16:55 pm

Updated : 22 Nov 2020 16:55 pm

 

Published : 22 Nov 2020 04:55 PM
Last Updated : 22 Nov 2020 04:55 PM

மகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 23 முதல் 29ம் தேதி வரை) 

vaara-natchatira-palangal

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மகம் -


திட்டமிட்டு செயல்பட்டால் அனைத்து காரியங்களையும் சாதிக்க முடியும்.

வருமானமும் திருப்திகரமாக இருக்கும். சுபச் செலவுகள் அதிகமாக இருக்கும். சொந்த வீடு வாங்குவது, ஆடை ஆபரணங்கள் வாங்குவது போன்றவை இருக்கும்.
பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் தொடரும். அலுவலகப் பணிகளில் சிறப்பாக பணிபுரிந்து சக ஊழியர்கள் முதல் உயரதிகாரிகள் வரை அனைவரிடமும் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

வேலை மாற்றம், இடமாற்றம் போன்றவை இருக்கும். தொழிலில் சீரான வளர்ச்சி இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

பெண்களுக்கு சுபகாரிய விஷயங்கள் பேசி முடிவாகும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

மாணவர்களுக்கு விரும்பிய கல்வி வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
இயல்பான நாளாக இருக்கும். பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரம் சீராக இருக்கும். ஒரு சிலருக்கு சிறு தூரப் பயணங்கள் ஏற்படலாம். ஆதாயம் தரும் விஷயங்கள் சற்று தாமதமாக முடிவாகும்.

செவ்வாய் -
சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். பணவரவு தாராளமாக இருக்கும். பணப்புழக்கம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். சுபவிசேஷங்கள் பற்றிய செய்தி திருப்திகரமாக இருக்கும்.

புதன் -
பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை இருக்கும். குடும்பச் செலவுகள் அதிகமாக ஏற்படும்.

வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பொருளாதார உதவிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளி -
எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்தபடியே முடியும். பணவரவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

சனி -
சிறப்பான பலன்கள் நடைபெறக்கூடிய நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி, எதிர்பார்த்த லாபம் அனைத்தும் கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். வங்கி கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

ஞாயிறு -
வீண் குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படும். நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். அநாவசியச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம் -
மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள். மகாலட்சுமி அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
******************

பூரம் -

நினைத்ததை நினைத்தபடி செய்து காட்டும் வாரம்.

நிதானமாக இருந்தால் நீங்கள் எடுத்துக் கொண்ட அனைத்து வேலைகளையும் எளிதாகச் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

நீண்டநாளாக விற்க முடியாமல் இருந்த சொத்துகளை விற்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் தீரும். சகோதர வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும்.

அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை இருக்கும். பெரிய மாறுதல் ஏதும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும் வாய்ப்பு உள்ளது. இதுவரை புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உருவாகும் வாய்ப்பு உள்ளது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த வாரம் -

திங்கள் -
வருமானம் திருப்திகரமாக இருக்கும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி, லாபம் இருக்கும். ஒரு சிலருக்கு தொழில் தொடர்பான முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

செவ்வாய் -
இயல்பான நாளாக இருக்கும். அலுவலகப் பணிகளில் அனைத்தும் இன்று செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும்.

புதன் -
சிறப்பான பலன்கள் நடக்கும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். தொழில் அல்லது வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த கடன் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். தொழில் தொடர்பான முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும்.

வியாழன் -
நிதானமாக இருக்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பதட்டத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினருடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நிதானமாக இருக்க வேண்டும்.

வெள்ளி -
எதிர்பாராத உதவிகள் தேடி வரும். தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

சனி -
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய நாள். எதிர்பாராத பண வரவு உண்டாகும். முக்கியமான பிரச்சினைகளில் இன்று பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பீர்கள். வியாபார நிமித்தமான பயணத்தால் ஆதாயம் உண்டு.

ஞாயிறு -
நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பேசுகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை வழிபாடு செய்யுங்கள். அன்னைக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்குங்கள். நன்மைகள் நடக்கும்.
*******************************

உத்திரம் -

அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரம்.

முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுவரை இருந்து வந்த செலவுகள் வெகுவாகக் குறையும். வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.
குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்களில் நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை இருக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தொழிலில் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும். வியாபாரம் நல்ல வளர்ச்சியைப் பெறும்.
பெண்களுக்கு சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து ஆதாயம் உண்டாகும். நெருங்கிய உறவினர்களால் ஆதாயங்கள் ஏற்படும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். உயர்கல்விக்கான வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.


இந்த வாரம் -

திங்கள் -
எந்தவொரு விஷயத்தையும் பொறுமையாகக் கையாள வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். மின்சாதனப் பொருட்களைக் கவனமாக கையாள வேண்டும்.

செவ்வாய் -
பணவரவு பல வழிகளிலும் இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் எளிதாக முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வருமானம் உண்டாகும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய விஷயங்கள் முடிவாகும்.

புதன் -
பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது. இயல்பான நாளாக இருக்கும். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். ஆலய தரிசனங்கள் உண்டாகும்.

வியாழன் -
பண வரவுகளால் மனநிறைவு அடையும் நாள். முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய விஷயங்கள் முடிவாகும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

வெள்ளி -
நிதானமாக இருக்க வேண்டும். கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. மனதை கட்டுப்படுத்த வேண்டும்.

சனி -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். பணவரவு எதிர்பாராத வகையில் இருக்கும். சிறு தூரப் பயணம் ஏற்படும், அதில் ஆதாயம் கிடைக்கும்.

ஞாயிறு -
வியாபார விஷயமான பயணங்களால் ஆதாயம் அடையக்கூடிய நாள். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த ஒரு விஷயம் இன்று சுமுகமாக முடியும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சூரிய வழிபாடு செய்யுங்கள். ஆதித்ய ஹிருதயம் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

மகம்பூரம்உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் - (நவம்பர் 23 முதல் 29ம் தேதி வரை)உத்திரம்வார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்MagamPooramUtthiramVaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x