Published : 15 Oct 2020 10:56 am

Updated : 15 Oct 2020 10:56 am

 

Published : 15 Oct 2020 10:56 AM
Last Updated : 15 Oct 2020 10:56 AM

கடகம், சிம்மம், கன்னி; வார ராசிபலன்; அக்டோபர் 15 முதல் 21ம் தேதி வரை

vaara-rasipalan

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கடகம்

(புனர் பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

இந்த வாரம் வீண் செலவுகள் குறையும்.

எந்த ஒரு வேலையைச் செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவதையும் மற்றவர்களுக்காக வாதாடுவதையும் தவிர்ப்பது நல்லது. வருமானம் கூடும்.

மன திருப்தி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும். வரவு இருந்த போதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் முதலீடு செலவு உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. மேலிடத்துடன் கனிவை அனுசரிப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு பணவரத்து அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு மேலிடம் சொல்வதைக் கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாகப் படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமை: திங்கள், செவ்வாய்
எண்: 2, 9
திசை: வடக்கு, வடகிழக்கு
நிறம்: வெள்ளை, நீலம்
பரிகாரம்: திங்கட்கிழமையில் ஆதிபராசக்தியை வழிபடுவது காரியத் தடைகளை நீக்கும். மன அமைதியைத் தரும்.
******************************

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

இந்த வாரம் வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியைத் தரும்.

பணவரத்து எதிர்பார்த்ததைப் போல இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். அதே வேளையில் ராசியை செவ்வாய் பார்ப்பதால் மற்றவர்களிடம் உங்கள் கருத்துகளைக் கூறும்போது அவர்கள் தவறாக அதைப் புரிந்து கொள்ளலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க நேரும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். கணவன் மனைவியிடையே மனஸ்தாபங்கள் அகலும். எனவே கவனமாக எதையும் பேசுவது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும்.

அக்கம்பக்கத்தினருடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு விவேகமாக செயல்படுவது வெற்றியைத் தரும்.

கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் குறையும். அரசியல்துறையினருக்கு நினைக்கும் காரியங்கள் தள்ளிப்போகலாம். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாகக் கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, திங்கள்
எண்: 1, 3
திசை: கிழக்கு, தென்கிழக்கு
நிறம்: சிவப்பு, நீலம்
பரிகாரம்: நரசிம்மரை தீபம் ஏற்றி வழிபடுங்கள். எல்லா நன்மைகளையும் உண்டாக்கும்.
********************

கன்னி

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

இந்த வாரம் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும்.

பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறுகள் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளைப் பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும்.

தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி விடுவார்கள். பணவரத்து கூடும்.
தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமுகமான நிலை உண்டாகும்.
கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும்.

பெண்களுக்கு சாதக பாதகங்களைப் பற்றி கவலைப்படாமல் எந்தக் காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

கலைத்துறையினர் பேச்சுத் திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த காரியங்கள் தடைகளின்றி முடியும்.
மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட கிழமை: திங்கள், புதன்
எண்: 2, 5
திசை: தெற்கு, தென்கிழக்கு
நிறம்: வெள்ளை, பச்சை
பரிகாரம்: புதன்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.
**********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

கடகம்சிம்மம்கன்னி; வார ராசிபலன்; அக்டோபர் 15 முதல் 21ம் தேதி வரைகன்னிவார ராசிபலன்பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்Vaara rasipalan

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author