Published : 13 Sep 2020 04:16 PM
Last Updated : 13 Sep 2020 04:16 PM

மூலம், பூராடம், உத்திராடம் - வார நட்சத்திர பலன்கள் - (செப்டம்பர் 14 முதல் 20 வரை)

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -

நினைத்தவை அனைத்தும் கிடைக்கும் வாரம்.

ஆதாயம் தரக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். தாயாரின் உடல்நலத்திலும் தந்தையின் உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும்.

மனதளவில் பாதிப்பு தந்து கொண்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் இனி படிப்படியாக விலக ஆரம்பிக்கும். தாமதப்பட்டுக்கொண்டிருந்த திருமண முயற்சிகள் இப்போது சாதகமாகும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குறிப்பாக பாகப்பிரிவினைகள் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். உங்கள் கருத்துக்களுக்கு அனைவரும் மதிப்பளிப்பார்கள்.

தொடர்ச்சியாக உங்களை தொந்தரவு செய்து கொண்டிருந்த நபர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். தொழிலில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்பெறுவார்கள்.

பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பாராத உதவிகள் எதிர்பாராத இடத்திலிருந்து கிடைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும். பணவரவு சரளமாக இருக்கும். எந்த முயற்சியிலும் அதிகப்படியான லாபம் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மன நிறைவும் மகிழ்ச்சியும் தரக் கூடிய நாள்.

செவ்வாய்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். மன நிம்மதியும் மனநிறைவும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.


புதன் -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் தீரும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய சலுகைகள் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சகோதரர்களும் நண்பர்களும் உதவி செய்ய முன்வருவார்கள்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்கள் நல்ல முடிவு கிடைக்கும்.

வெள்ளி -
உற்சாகமான நாளாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

சனி-
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சோம்பல் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தி குழப்பிக் கொள்வீர்கள். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய தகவல் கிடைக்கும். அது மனநிறைவைத் தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள். அனுமன் சாலீசா பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
**********************

பூராடம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம்.

தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல்நலத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். மன சஞ்சலம் ஏற்படுத்திய நோய் பிரச்சினை இல்லாமல் போகும். மீண்டும் உற்சாகமான மன நிலைக்கு வருவீர்கள்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் தேவையான உதவிகள் கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் தீர்ந்து, தொழிலுக்குத் தேவையான கடனுதவி கிடைக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.

சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். சகோதரர்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய ஒப்பந்தம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உதவிகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் கணிசமாக குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துகள் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன் -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அலுவலக வேலைகளில் சிறப்பாக பணி செய்வீர்கள். தொழில் நிமித்தமான பயணங்களால் ஆதாயம் ஏற்படும். புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. அவர்கள் மூலமாக தொழில் முதலீடுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். எவரிடமும் கடுமை காட்ட வேண்டாம். பொறுமை நிதானம் மிகவும் அவசியம். உணர்ச்சிவசப்பட்டு எந்தச் செயலிலும் ஈடுபடாதீர்கள்.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வீடு விற்பது வாங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீவிநாயகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். நன்மைகள் கூடுதலாகும்.
*********************

உத்திராடம் -

திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிக்கும் வாரம்.

பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள்.

சகோதர வழியில் நன்மைகளும் கிடைக்கப்பெறுவீர்கள். தாய்மாமன் வழி உறவினர்களால் ஏற்பட்ட மன வருத்தங்கள் தீரும். சொத்து தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள்.

அலுவலகப் பணியில் சகஜ நிலையை நீடிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும்.

பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் காணும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கமிஷன் தொடர்பான வியாபாரத்தில் அதிகப்படியான லாபம் கிடைக்கும். தேவையான உதவிகள் சரியான சமயத்தில் கிடைக்கும்.

செவ்வாய்-
வருவாய் ஆதாயங்கள் அதிகப்படியாக கிடைக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீடு மாற்றம், வாகன மாற்றம் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

புதன்-
எந்த விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் தேவையற்ற வாக்குவாதங்களைச் செய்ய வேண்டாம். பயணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். கொடுத்த பணிகளை சிறப்பாகச் செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி-
அத்தியாவசிய பயணங்கள் தவிர மற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது.வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.

சனி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். நெருங்கிய உறவினர்களிடம் ஒரு சில உதவிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு இன்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகள் இன்று சுமுகமான முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரக வழிபாடு செய்யுங்கள். கோளறு பதிகம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x