Published : 31 Aug 2020 11:30 AM
Last Updated : 31 Aug 2020 11:30 AM

திருவோணம், அவிட்டம், சதயம்; வார நட்சத்திர பலன்கள்; (ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை) 

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

திருவோணம் -

எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும் வாரம்.

ஆதாயம் தரக்கூடிய விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.

தொழிலில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள்.

பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்த பெண்களுக்கு இப்பொழுது நல்ல வேலை அமையும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு இப்போது புத்திர பாக்கியம் உண்டாகும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதம் பெறுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
செயல்களில் வெற்றி, எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் எதிர்பார்த்த லாபம் போன்றவை கிடைக்கக்கூடிய நாள். கிடைக்கின்ற தகவல்கள் அனைத்துமே மன மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். திருமணம் தொடர்பான விஷயங்களில் இன்று நல்ல முடிவு எட்டப்படும். அலுவலகப் பணிகள் திருப்திகரமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

செவ்வாய் -
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். சக ஊழியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். மன நிம்மதியும் மனநிறைவும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.


புதன் -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் தீரும். இன்று எடுத்துக் கொள்ளும் எல்லா முயற்சிகளிலும் முழு வெற்றியைக் காணலாம். எதிர்பார்த்த லாபத்தை விட அதிகப்படியான லாபம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான ஆதாயத்தை அடையலாம். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சராசரியான நிலையே இருக்கும். செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம்.

வெள்ளி -
உற்சாகமான நாளாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

சனி -
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சோம்பல் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தி குழப்பிக் கொள்வீர்கள். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு -
அதிக நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய தகவல் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ அபிராமி அன்னையை வணங்கி வாருங்கள். அபிராமி அந்தாதியை பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
**********************
அவிட்டம் -

எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம்.

தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். சகோதரர்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையினருக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் தொடர்பான சுபவிசேஷங்கள் முடிவாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

செவ்வாய் -
எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உதவிகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் கணிசமாகக் குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன் -
தொழில் தொடர்பாக எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் காணப்படும். ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கையெழுத்தாகும். வீடு தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் உறுதியாகும். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். குடும்பத்தினரிடம் கடுமை காட்ட வேண்டாம். பொறுமை நிதானம் மிக அவசியம், உணர்ச்சிவசப்பட்டு எந்த செயலையும் செய்ய வேண்டாம்.

சனி -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
கோளறு பதிகம் படியுங்கள். சனிபகவான் வழிபாடு சிறப்பான பலனைத் தரும். நன்மைகள் கூடுதலாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
**************************

சதயம் -

திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிக்கும் வாரம்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதார பிரச்சினைகள் தீரும். தாய் மாமன் வகை உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். சகோதர வழியில் இருந்த சங்கடங்கள் தீரும். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். வழக்கு பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

அலுவலகப் பணியில் சகஜ நிலையே நீடிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் கருத்துக் கூற வேண்டாம். அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டும். அக்கம்பக்கத்தினருடன் வீண் சச்சரவுகளைத் தவிர்க்க வேண்டும்.

செவ்வாய் -
சொத்துகள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

புதன் -
எந்த விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். குழந்தைகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் தேவையற்ற வாக்குவாதங்களைச் செய்ய வேண்டாம். பயணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். கொடுத்த பணிகளைச் சிறப்பாக செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி -
அத்தியாவசிய பயணங்கள் தவிர மற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது. வீண் செலவுகள், விரயங்கள் ஏற்படும்.

சனி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். நெருங்கிய உறவினர்களிடம் ஒரு சில உதவிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு இன்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகள் இன்று சுமுகமான முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x