Published : 31 Aug 2020 09:37 am

Updated : 31 Aug 2020 09:37 am

 

Published : 31 Aug 2020 09:37 AM
Last Updated : 31 Aug 2020 09:37 AM

அஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள்; (ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை) 

vaara-natchatira-palangal

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்தம் -

நினைத்தது நிறைவேறும் வாரம் இது.

பணவரவு சரளமாக இருக்கும். நெருக்கடி தந்து கொண்டிருந்த பிரச்சினைகள் படிப்படியாக தீரும். குடும்ப உறவுகள் பலப்படும். உறவினர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் தீரும். ஒரு சில உதவிகளை உறவினர்களுக்கு செய்து தருவீர்கள்.

அலுவலகத்தில் இயல்பான நிலையே தொடரும். நண்பர்கள் உங்களுக்கு தாமாக முன் வந்து உதவுவார்கள். தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். இழந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் புதிய உத்வேகம் பெறுவார்கள். கல்வியில் நல்ல முனைப்போடு கவனம் செலுத்துவார்கள். கலைத்துறையினருக்கு நண்பர்கள் மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

செவ்வாய் -
இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். ஆனால் மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றும். எதிர்காலத் திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

புதன்-
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். கமிஷன் தொடர்பான வியாபாரிகளுக்கு லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் விலகும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளில் பேச்சுவார்த்தை நடக்கும்.

வியாழன்-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஒரு சில பிரச்சினைகள் அல்லது இடர்பாடுகள் ஏற்படலாம். நிதானமாக இருந்தால் அவற்றை சமாளித்து சரிசெய்ய முடியும்.

வெள்ளி-
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் சுயதொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை உருவாகும். அதற்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய விசேஷங்கள் பேசி முடிக்கப்படும்.புத்திர பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் இன்று உறுதியாகும்.

சனி-
தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான வாய்ப்புகளால் மன நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வத்திற்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு தருவார்கள். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஞாயிறு-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். முக்கிய நபரிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவரை வணங்குங்கள். பைரவருக்கு செவ்வரளி மாலை சூட்டுங்கள். பிரச்சினைகள் தீரும். நினைத்தது நிறைவேறும்.
*********************

சித்திரை -

அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும்.

ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் முற்றிலுமாக விலகும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளை பேசித் தீர்க்கப்படும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். தாயாரின் உடல் நலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். தந்தை மற்றும் தந்தைவழி உறவுகளிடம் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

அலுவலகப் பணியில் இருந்த அழுத்தங்கள் விலகும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் எதிர்பார்த்தபடியே வளர்ச்சிப் பாதையில் செல்லும். ஒரு சில தடைகள் இருந்தாலும் அந்த தடைகளைத் தாண்டி வெற்றி பெறக்கூடிய வாரமாக இருக்கும்.

வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மனமகிழ்ச்சி தரும்படியாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

இந்த வாரம் -

திங்கள் -
நினைத்தது நிறைவேறும் நாள். எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எண்ணியது எண்ணியபடியே செயலாகும் நாள்.

புதன் -
எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகி இருப்பது நல்லது. உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். அலுவலகப் பணியில் உங்களுடைய வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். அடுத்தவர் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

வியாழன் -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். அதிக நன்மைகள் ஏற்படும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடனுதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி -
அலுவலகத்தில் பணிச்சுமை நீடிக்கும். வியாபாரத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தை மற்றவர்களோடு பங்கு போட வேண்டியது வரும். எந்தச் செயலிலும் அதிக கவனம் வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் பாதிப்பைத் தரும் என்பதை உணருங்கள்.

சனி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒற்றுமை நீடிக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். வியாபார நிமித்தமாக ஏற்படும் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.

ஞாயிறு -
பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொறுமையும் நிதானமும் அவசியம். பேசுகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் தேவை.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீநிவாச பெருமாளை வணங்குங்கள். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். நன்மைகள் அதிகமாகும்.
*************************

சுவாதி -

நினைத்ததெல்லாம் நடக்கும் வாரம். பணவரவுகள் தாராளமாக இருக்கும்.

இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை இருந்து வந்த நெருக்கடி தந்துகொண்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் இனி படிப்படியாக முடிவுக்கு வரும். உங்களுக்கு சாதகமாகவே அனைத்தும் அமையும்.

அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அரசு வழியில் இருந்துவந்த நெருக்கடிகள் விலகி அரசின் உதவிகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். பெண்கள் சுயதொழில் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டி அதில் வெற்றியும் பெறுவார்கள். ஒரு சிலருக்கு வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி இன்று கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு மகிழ்வீர்கள்.

செவ்வாய் -
எதிர்பாராத செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும். தொழில் தொடர்பாக சில சிக்கல்களைச் சந்திக்க வேண்டியது வரும்.

புதன் -
இல்லத்தில் சுப காரியங்கள் சம்பந்தமான விஷயங்கள் முடிவு எடுக்கப்படும். சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அனைவருக்கும் லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் இன்று கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன்-
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வெள்ளி -
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி -
தொழில் தொடர்பாக நம்பிக்கையான நபரை சந்தித்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு -
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொருளாதாரச் சிக்கல்கள் தீரக் கூடிய அளவுக்கு பணவரவு இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

அஸ்தம் சித்திரை சுவாதி; வார நட்சத்திர பலன்கள்; (ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை)அஸ்தம் சித்திரைசுவாதிவார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்Vaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author