Published : 09 Aug 2020 19:45 pm

Updated : 09 Aug 2020 19:46 pm

 

Published : 09 Aug 2020 07:45 PM
Last Updated : 09 Aug 2020 07:46 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம் தேதி வரை) 

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

பூரட்டாதி -


அதிக நன்மைகள் ஏற்படும் வாரம்.

எடுத்துக்கொண்ட முயற்சிகள் முன்னேற்றம் உண்டாகும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் சுமுகமான நிலை தொடரும்.

இதுவரை இருந்துவந்த மனவருத்தங்கள் அகலும். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணமான தம்பதிக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

நெருக்கடி தந்து கொண்டிருந்த கடன் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் சுமுகமான முடிவு ஏற்படும். அலுவலகப் பணியில் இயல்பான நிலையே இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப்பற்றாக்குறை நீங்கும்.

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை வராதிருந்த பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். பெண்களுக்கு திருமணம் உறுதியாகும் திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

மாணவர்களுக்கு விரும்பிய கல்வி விரும்பியபடியே கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்குத் தேவையான வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
.

செவ்வாய் -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையைச் செய்ய வேண்டியது வரும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும்.

புதன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். புத்திர பாக்கியம் தொடர்பான செய்தி உறுதியாகி மனமகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

வியாழன் -
எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் பொறுமை காப்பது நல்லது. பேச்சுவார்த்தை இருந்தால் தள்ளி வையுங்கள். பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதைத் தவிர்த்து விடுங்கள்.

வெள்ளி -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் மனநிறைவைத் தரும். அசையாச் சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பீர்கள்.

சனி -
குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள். பழுதடைந்த பொருட்களை மாற்றி புதிதாக வாங்குவீர்கள்.

ஞாயிறு -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரம் வளர்ச்சி அடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மனை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
*******************************

உத்திரட்டாதி -

எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய வாரம்.

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இதுவரை தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடாதவர்கள் கூட இப்போது புதிதாகத் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும்.

திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடப்பதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும்.

திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். வியாபாரம் வளர்ச்சி அடையும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமான முடிவுக்கு வரும்.

செவ்வாய் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையைச் செய்ய வேண்டியது வரும்.

புதன் -
நெருக்கடி தந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாழன்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்திலும் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் சரியாக செய்து முடிப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகளில் தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான முடிவு ஏற்படும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

வெள்ளி -
தொலைபேசி வழித் தகவல் மனதிற்கு உற்சாகத்தைத் தரும்.தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

சனி-
அதிக நன்மைகள் நடைபெறும். பண வரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். வியாபாரம் தொடர்பாக ஏற்படும் பயணத்தால் லாபம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் சிறு உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஞாயிறு -
சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*************************

ரேவதி -

திட்டமிட்டு செயல்பட்டு அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் முற்றிலுமாக விலகும். தாயாரின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் கல்வியில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுப்பீர்கள்.

அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும். இதுவரை ஒத்துழைப்பு தராத சக ஊழியர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தொழில் வட்டாரத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் எல்லாக் காரியமும் சாதகமாக இருக்கும்.

புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் கூட்டு வியாபாரம் செய்ய முற்படுவீர்கள். அதற்குத் தேவையான உதவிகள் எளிதாகக் கிடைக்கும். பெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கலைஞர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். சொத்து விற்பனை சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.


செவ்வாய்-
பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். உடலில் அசதி சோர்வு ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். அமைதியாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கைக் கடைப் பிடியுங்கள்.

புதன் -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வியாழன் -
வங்கியில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். நெருக்கடி தந்து கொண்டிருந்த முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்.

சனி-
தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் கருத்துகள் சொல்லாமல் இருப்பது நல்லது. செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன் நன்றாக படித்து பார்த்து கையெழுத்திடுங்கள்.

ஞாயிறு-
புதிதாக தொழில் அல்லது வியாபாரம் ஆரம்பிப்பது தொடர்பாக குடும்பத்தாருடன் ஆலோசனை செய்வீர்கள். சகோதரர்கள் சொத்துப் பிரச்சினையில் உங்களுக்கு இணக்கமாக இருப்பார்கள். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீநடராஜரை வழிபடுங்கள். நடராஜருக்கு மலர்மாலைகள் சூட்டி அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
**********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


தவறவிடாதீர்!

பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம் தேதி வரை)பூரட்டாதி உத்திரட்டாதிரேவதிவார நட்சத்திரப் பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்Vaara natchatira palangal

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author