Published : 09 Aug 2020 06:29 PM
Last Updated : 09 Aug 2020 06:29 PM

மூலம், பூராடம், உத்திராடம்; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16ம் தேதி வரை) 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மூலம் -

எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் முழு வெற்றியை தரக்கூடியதாக இருக்கும்.

எதிர்பார்த்த தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். சகோதர ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றினாலும் அதை எல்லாம் சரி கட்டி சமாளிக்கும் ஆற்றல் இருக்கும்.

யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது. சிக்கனம் மிக மிக அவசியம். அநாவசியச் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற பயணங்கள், வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் மற்றும் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.

தொழில் முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள்.

பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக இருக்கும். திருமணத் தேதி் உறுதி் செய்யப்படும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். கலைஞர்களுக்குத் தேவையான உதவிகள் நண்பர்களால் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
இரட்டிப்பு வருமானம் கிடைக்கக்கூடிய நாள். அதிக முயற்சிகள் இல்லாமலேயே எல்லா வேலைகளும் முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரம், மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் காணப்படும். மொத்தத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கக் கூடிய நாள்.

செவ்வாய் -
எண்ணங்கள் அனைத்தும் செயல் வடிவமாகும். முயற்சிகள் முழு வெற்றி தரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். தரகு தொடர்பான தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப ஒற்றுமை நீடிக்கும். திருமணம் தொடர்பாக சாதகமான பதில் கிடைக்கும்.

புதன்-
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகம் தோன்றும். சேமிப்புகளை உயர்த்துவதற்கான வழிவகைகளைச் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். புத்திர பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள்.

வியாழன்-
தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும்.

வெள்ளி-
எந்த விஷயத்திலும் பொறுமையைக் கையாளவேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானத்தை இழக்காமல் இருக்க வேண்டும். அலுவலக வேலைகளிலும் கவனமாக இருக்க வேண்டும்.

சனி-
தொலைபேசி வழித் தகவல் மனதுக்கு நிறைவைத் தரும். எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உங்களுடைய அவசரத் தேவைகள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

ஞாயிறு-
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். உதவிகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் இன்று பேசி முடிவு எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது நன்மைகளை அதிகப்படுத்தும். மனக் குழப்பங்கள் தீரும்.
******************************

பூராடம் -

எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் எளிதாக செய்து முடிக்கும் வாரம்.

மன நிறைவைத் தரக் கூடிய வாரமாக இருக்கும். மனதில் இருந்த அச்ச உணர்வுகள் முழுமையாக விலகும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் முற்றிலுமாக விலகும்.

அதிகப்படியான செலவு செய்து கொண்டிருந்த காரியங்கள் யாவும் இனி செலவுகள் இல்லாமலேயே பிரச்சனைகள் தீரும் சூழல் உருவாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.
வியாபாரத்தில் இதுவரை இருந்த மந்த நிலை மாறி வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். சுபகாரிய விசேஷங்களில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய யுத்திகளைக் கையாண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்கு வேலையிலிருந்த அழுத்தம் குறைந்து மனநிம்மதி ஏற்படும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும்.

செவ்வாய் -
எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் வருமானம் இருமடங்காக ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். இருந்த ஒரு சில பிரச்சினைகளும் இன்று முடிவுக்கு வரும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு குழந்தை பாக்கியம் பற்றிய தகவல் உறுதியாகும்.

புதன் -
வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக முன்னேற்றமும் தேவையான உதவிகளும் கிடைக்கும். குடும்பத்திற்குத் தேவையான ஒரு சில அத்தியாவசியப் பொருட்களை இன்று வாங்குவீர்கள்.

வியாழன் -
மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு மன நிறைவைத் தரக் கூடியதாக இருக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஒன்றை மேற்கொண்டு ஒப்பந்தம் பெறுவீர்கள். சுப விசேஷங்கள் பற்றிய தகவல் உறுதியாகும்.

வெள்ளி -
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும் வங்கி கடன் பிரச்சினை ஒன்றை முடிவுக்குக் கொண்டு வந்து புதிய கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. திருமணம் தொடர்பான விஷயங்கள் இன்று முடிவாகும்.

சனி-
எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் இருக்க வேண்டும். எந்த முடிவுகளையும் உடனுக்குடன் எடுக்க வேண்டாம். நிதானமாகச் சிந்தித்து அல்லது ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்க வேண்டும். திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி இன்று தானாக தேடி வரும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தரும். நண்பர்களாலும் உறவினர்களாலும் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்துவிடுவீர்கள். அலுவல் விஷயமாக தாமதப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சில பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வாருங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தவை நடக்கும்.
***************************

உத்திராடம் -

மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம்.

ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

இல்லத்திற்குத் அத்தியாவசியமானப் பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில முதலீடுகளில் செய்வதற்கு முயற்சி செய்வீர்கள். தொழில் தொடர்பாக நல்ல தகவல்களும் முன்னேற்றமும் உண்டாகும்.

வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீரும். குடும்பத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

பெண்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதர வழியில் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சீரான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவும் உண்டு.

இந்த வாரம் -

திங்கள் -
தேவையான உதவிகள் தேடி வரும்.அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை வரும். சலுகைகள் கிடைக்கும். ஒரு குழுவுக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பும் உள்ளது தொழில் மற்றும் வியாபாரம் சீரான வளர்ச்சியில் இருக்கும். நீண்ட நாளாக தொடர்பில் இல்லாத நண்பர் இன்று தொடர்பு கொள்வார்.

செவ்வாய் -
குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது போன்ற சிந்தனைகள் உருவாகும். அதற்கான முயற்சிகளைத் தொடங்குவீர்கள்.

புதன் -
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக லாபம் ஏற்படும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறக் கூடிய நாளாக இருக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய விஷயங்கள் பற்றிய தகவல் இன்று கிடைக்கும்.

வியாழன் -
பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் நிறைய அழுத்தங்கள் ஏற்படும். பரபரப்பாக இயங்குவீர்கள். குடும்பத்தினர் தொல்லை அதிகரிக்கும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.

வெள்ளி -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும். ஆதாயம் அதிகமாக ஏற்படக்கூடிய நாள். உத்தியோகத்தில் முடிக்காமல் இருந்த வேலைகள் அனைத்தும் இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சியும் உண்டாகும்.


சனி -
உங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒரு சில உதவிகளைச் செய்து தருவீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பராமரிப்புச் செலவுகள் அதிகமாக இருந்தாலும் மன நிறைவு இருக்கும்.

ஞாயிறு-
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அதிக நன்மைகள் நடைபெறும் நாள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சூரிய வழிபாடு செய்யுங்கள். ஆதித்ய ஹிருதயம் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
*************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x