Published : 06 Jul 2020 10:46 am

Updated : 06 Jul 2020 10:46 am

 

Published : 06 Jul 2020 10:46 AM
Last Updated : 06 Jul 2020 10:46 AM

மகம், பூரம், உத்திரம்;  வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 6 முதல் 12 வரை) 

vaara-natchatira-palangal

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மகம் -
பெருமளவு நன்மைகள் நடைபெறும் வாரம் இது.
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். சகோதர வழியில் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும்.
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைக்கும்.
வியாபாரம் மற்றும் தொழிலில் படிப்படியான சீரான வளர்ச்சி ஏற்படும். தனியார் பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கலைத் துறை சார்ந்தவர்கள் நிதானப் போக்கை கடைபிடிப்பது நல்லது. இன்னும் சில காலம் பொறுத்து இருந்தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைக் கையாளுவீர்கள். எடுக்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான தேவையான உதவிகளும் ஆதரவும் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வங்கியில் இருந்து சாதகமான தகவல் கிடைக்கப் பெறுவீர்கள்.

செவ்வாய் -
எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனம் தேவை. அலட்சியமாக இருக்க வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நாம் நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லையே என்ற ஆதங்கமும் எரிச்சலும் அதிகமாகும். பொறுமையாக இருக்க வேண்டும்.

புதன் -
ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும். சுபகாரிய பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு அது தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட விஷயங்களுக்கு முகூர்த்த தேதி குறிக்கும் வாய்ப்பு உள்ளது.

வியாழன் -
குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்கள் உங்களின் உதவியை எதிர்பார்ப்பார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையைப் பார்க்க வேண்டியதிருக்கும். வியாபாரம் தொடர்பாக ஏற்படும் பயணம் அலைச்சல் கொடுப்பதாக இருந்தாலும், கடைசி நேரத்தில் மன நிம்மதி தரக்கூடியதாக இருக்கும்.

வெள்ளி -
நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டிய நாள். வியாபாரத்தில் கடன் கொடுப்பது கடன் வாங்குவது கூடாது. அலுவலகப் பணிகளில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். நிதானமான செயல்பாடு நிம்மதியைத் தரும்.

சனி -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஒரு சில உதவிகளும் ஆதாயமும் ஏற்படும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
அனுமன் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். மனக்குழப்பம் தீரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
**************************

பூரம் -
தேவையான உதவிகள் அனைத்தும் தக்க சமயத்தில் கிடைக்கும்.
மனக் குழப்பங்களும் மனபாரமும் தீரும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். சகோதர ஒற்றுமை அதிகரிக்கும்.
வாழ்க்கைத் துணையின் குடும்பத்தால் உதவிகள் அதிகமாக கிடைக்கும். பொருளாதாரச் சிக்கல்கள் தீரும். அலுவலகப் பணியில் இருந்த அச்ச உணர்வு நீங்கும். வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும். குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும். மாணவர்களுக்கு புதிய கல்வி கற்கும் ஆர்வமும், புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வமும் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனநிறைவு ஏற்படும் நாள்.வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான அரசின் உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது.

செவ்வாய் -
எதிர்காலத் திட்டங்களை வகுப்பீர்கள். குடும்ப நலன் கருதி ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நன்மைகள் பெருகும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் இயல்பான நிலையே தொடரும். அலுவலகப் பணிகளில் கூடுதல் சுமை ஏற்பட்டாலும் சமாளித்து வேலைகளைச் செய்வீர்கள்.

புதன் -
தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும்.

வியாழன் -
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஒப்பந்தங்களாக மாறும்.

வெள்ளி -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணியை பகிர்ந்து கொள்ள வேண்டியது வரும். எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் மனக்குழப்பங்கள் ஏற்படும்.

சனி -
மனதை உறுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகளில் நல்ல முடிவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உதவியுடன் முக்கியமான வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

ஞாயிறு -
குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள்.எந்த ஒரு பிரச்சினைகளிலும் தலையிட வேண்டாம். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை பாராயணம் செய்யுங்கள். ஆண்டாள் தாயாரை நினைத்து வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
******************


உத்திரம் -
அதிக நன்மைகள் ஏற்படும் வாரம் இது.
இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இனி எளிதாக முடியும். அலுவலகத்தில் கிடைக்க வேண்டிய சலுகைகளும் ,பதவி உயர்வு உள்ளிட்டவையும் கிடைக்கும்.
குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். தாயார் மற்றும் தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்புக்கு மாறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்குச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்காலம் பற்றிய கவலை தீரும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். சகோதரர்களின் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையின் முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

செவ்வாய் -
நண்பர்களால் அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

புதன் -
மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தரகு தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பயணத் தொழில் கொண்டிருப்பவர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும்.

வெள்ளி -
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சை பேச்சு வார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைகளிடம் அன்பு பாராட்டுங்கள். வாழ்க்கைத் துணையிடம் தேவை இல்லாத வார்த்தைப் போர் வைத்துக்கொள்ள வேண்டாம்.

சனி -
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் குறையும். சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனாலும் கடனாகக் கொடுக்க வேண்டிய சூழ்நிலைகளும் இருக்கும்.

ஞாயிறு -
இயல்பான நாளாக இருக்கும். வீட்டுப் பராமரிப்புப் பணிகளை செய்வீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகலாம். அலுவலகத்தில் முடிக்காமல் இருந்த வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். மனக் குழப்பங்கள் தீரும்.
***********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

மகம் பூரம் உத்திரம்;  வார நட்சத்திர பலன்கள் - (ஜூலை 6 முதல் 12 வரை)வார நட்சத்திரப் பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author