Published : 29 Jun 2020 12:37 pm

Updated : 29 Jun 2020 12:37 pm

 

Published : 29 Jun 2020 12:37 PM
Last Updated : 29 Jun 2020 12:37 PM

அஸ்தம், சித்திரை, சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை) 

vaara-natchatira-palangal

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


அஸ்தம் -
தெளிவாக சிந்தித்து காரியங்களை சாதித்துக் கொள்ளக்கூடிய வாரம்.
முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும். ஆரோக்கிய பிரச்சினைகள் மட்டும் அடிக்கடி தலைதூக்கும். தகுந்த மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக தாயாரின் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அலுவலகப் பணிகளில் பெரிய மாறுதல் ஏதும் இருக்காது. இயல்பான நிலை தொடரும்.
தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
பெண்களுக்கு தாமதப்பட்டு வந்த திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு நண்பர்கள் மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


இந்த வாரம் -

திங்கள் -
நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தந்தைவழி உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

செவ்வாய் -
பொறுமையும் நிதானமும் அதிகமாக தேவைப்படக்கூடிய நாள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் பணிகளை மட்டும் கவனித்து வருவது நல்லது. அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். தேவையற்ற சர்ச்சைக்குரிய பேச்சுக்களை எங்கும் பேசாமல் இருக்க வேண்டும்.

புதன் -
எண்ணங்கள் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நன்மைகள் நடக்கும். பெண்களுக்கு சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன் -
பயணங்கள் எதுவும் செய்ய வேண்டாம். யாரிடமும் எதற்காகவும் கோபப்பட வேண்டாம். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். கடன் தொடர்பான பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

வெள்ளி -
அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நடைபெறும். எதிர்பார்த்த தொழில் முதலீடு கிடைக்கும். சொத்துகள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு சகோதர வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

சனி -
சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அலுவலக வேலையில் மந்தமான நிலை ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகளில் இழுபறி நீடிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் குறைவாகக் கிடைக்கும். கடன் கொடுப்பதோ அல்லது கடன் வாங்குவதோ கூடவே கூடாது.

ஞாயிறு -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாளாக சந்திக்க விரும்பிய நபரை இன்று சந்தித்து ஆதாயங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களால் தொழில் தொடர்பான ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்யுங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பது நல்ல பலன்களைத் தரும். ஆரோக்கியம் மேம்படும்.
*****************************************


சித்திரை -
நன்மைகள் நடக்கும் வாரம்.
வரவும் செலவும் சமமாகவே இருக்கும். எனவே சிக்கனம் அவசியம் தேவை. குடும்பத்தினர் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து தருவீர்கள். சுபகாரிய விஷயங்களுக்காக குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டியது வரும். எனவே சுபகாரிய விசேஷங்கள் நிச்சயம் நடக்கும் என நம்பலாம்.
பணிபுரியும் இடத்தில் இதுவரை இருந்துவந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். இயல்பான நிலைக்கு திரும்புவீர்கள். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக அரசு உதவிகளும், வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.
வியாபார வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். வியாபாரத்திற்காக எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும்.
பெண்களுக்கு நினைத்தது நிறைவேறும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு. கலைஞர்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
சுய சிந்தனை அதிகமாக இருக்கும். நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபார விஷயங்களில் முன்னேற்றம் காணலாம். சிறு தூரப் பயணம் ஒன்று ஏற்படும், பயணத்தால் சாதகமான விஷயங்கள் நடக்கும்.

செவ்வாய் -
பணவரவு சரளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய விசேஷங்கள் பற்றிய செய்தி உறுதி ஆகும். வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் காணலாம். எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கக் கூடிய நாள்.

புதன் -
கவனமாக செயல்பட வேண்டிய நாள். கோப உணர்வுகளை கட்டுப்படுத்தவேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். தேவையற்ற சர்ச்சைகள் தேடிவரும். அமைதியாக கடந்து செல்லுங்கள்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட அனைத்துப் பணிகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். நெருங்கிய உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வெள்ளி -
இயல்பான நாளாக இருக்கும். பிரச்சனைகளும் இருக்காது, அதே சமயம் பெரிய அளவிலான முன்னேற்றமும் இருக்காது. வரவும் செலவும் சமமாக இருக்கும். மனம் பரபரப்பாக இருக்கும். வியாபார விஷயங்கள் மந்தமாக இருக்கும். ஆனாலும் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது.

சனி -
சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சாதகமாக இருக்கும். கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். வங்கியில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும். தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும்.

ஞாயிறு -
செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வீண் விரயங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியம் தோன்றும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீநரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். ஸ்ரீநரசிம்மர் சகஸ்ரநாமம் கேளுங்கள். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
**********************************


சுவாதி -
எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
பணவரவு தாராளமாக இருக்கும். ஒரு சில விஷயங்களில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். தந்தைவழி சொத்துகள் சுமுகமாக பாகப்பிரிவினை ஏற்படும். தாய்வழி உறவுகள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
வியாபாரிகள் புதிய வியாபார முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அந்த முயற்சிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேலோங்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய கல்வி கற்கும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான அனைத்து உதவிகளும் தேடிவரும். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். அலைச்சல் குறைவாக இருக்கும் ஆதாயம் அதிகமாக இருக்கும்.

செவ்வாய் -
பணவரவு சரளமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.

புதன் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சுப விசேஷங்கள் இன்று முடிவாகும். புத்திர பாக்கியம் தொடர்பான செய்தி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தாய்வழி உறவினர்களால் தகுந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாழன் -
வேலை மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வாகன மாற்றுச் சிந்தனை ஏற்படும். மனதில் கடந்த சில நாட்களாக இருந்த குழப்பங்கள் இன்று முடிவுக்கு வரும்.

வெள்ளி -
எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

சனி -
மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். தெளிவாக சிந்திக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். பொறுமையாக இருக்க வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக இருங்கள்.

ஞாயிறு -
சொத்துகள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நெருங்கிய நண்பர்களால் வியாபார ஆதாயம் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை சூட்டி வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

அஸ்தம் சித்திரை சுவாதி; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை)அஸ்தம் சித்திரைசுவாதிசொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்வார நட்சத்திரப் பலன்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author