Published : 22 Jun 2020 16:17 pm

Updated : 22 Jun 2020 17:26 pm

 

Published : 22 Jun 2020 04:17 PM
Last Updated : 22 Jun 2020 05:26 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 22 முதல் 28ம் தேதி வரை)

vaara-natchatira-palangal

- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

பூரட்டாதி -
வருமானம் பல மடங்காக இருக்கும் வாரம்.
மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் ஏற்படும். இதுவரை தாமதப்பட்டு வந்த விஷயங்கள் அனைத்தும் இனி நீங்கள் எண்ணியபடியே நடக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சச்சரவுகள் அகலும்.
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இனி மன சஞ்சலத்திற்கு இடமிருக்காது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இதுவரை வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சியும் சாதகமாகும்.
தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.
பெண்களுக்கு உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய விசேஷங்கள் முடிவாகும். திருமணம் ஆன தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உருவாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவிகளும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானத்திற்கு குறை இருக்காது. வியாபாரிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலைகள் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். இப்போது இருக்கும் இடத்தை விரிவுபடுத்துவதற்கு முயற்சி செய்வீர்கள்.

புதன் -
முயற்சிகளில் முழு வெற்றி கிடைக்கும் நாள், எந்த வேலை செய்தாலும் அதில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். திருமணத் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பாராத அளவுக்கு இருக்கும். அரசு உதவிகள் வங்கிக் கடன் போன்றவை கிடைக்கும்.

வியாழன் -
பயணங்களைத் தவிர்க்க வேண்டும். தொழில் தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் வேண்டும். எந்த விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாத சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் நிதானப் போக்கு தேவை.

வெள்ளி -
பணவரவு தாராளமாக இருக்கக்கூடிய நாள். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்களுடைய பணிகளைப் பகிர்ந்து கொள்வார்கள். தொழில் செய்யும் இடத்திலும் வியாபார இடத்திலும் ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய நபர்களை சந்திப்பதால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்.


சனி -
முக்கியமான பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக முடிக்காமல் இருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். நெருங்கிய நண்பர்களால் பண உதவிகள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
முருகப்பெருமானை வழிபடுங்கள். முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபடுவது அதிக நன்மைகளை ஏற்படுத்தித் தரும்.
********************************


உத்திரட்டாதி -
பண வரவுகளால் மன நிறைவு உண்டாகும்.
கடந்த சில வாரங்களாக இருந்த குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். சகோதரர்களிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் அகன்று ஒற்றுமை ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும்.
தொழிலில் இதுவரை ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீரும். அரசு வழியில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
பெண்களுக்கு சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இந்த வாரம் தீரும். சகோதரர்கள் பல வகையிலும் உங்களுக்கு உதவி செய்வார்கள். கலைஞர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகள் தீரும்.

இந்த வாரம் -

திங்கள் -
வருமானம் இரு மடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் வசூலாகும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். செயல் வீரனாக இருப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரு மடங்கு ஏற்படும். தேவையான உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும். இன்று வங்கிக் கடன் தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டால் முழு வெற்றியைப் பெறலாம்.

புதன் -
எதிர்கால சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் தேவையற்ற சஞ்சலம் ஒன்று உருவாகும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடர்ந்தாலும், சற்று மந்தமான நிலை இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

வியாழன் -
சிறப்பான பலன்கள் நடைபெறும் நாள். எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளிலும் முழுமையான வெற்றி கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஒரு சிலருக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். நீண்டநாளாக வராமலிருந்த பணத்தை இன்று கடுமை காட்டி வசூலித்து விடுவீர்கள்.

சனி -
அலைச்சல் அதிகமாக இருக்கும். செலவுகள் எதிர்பாராத வகையில் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். வீண் சச்சரவுகளில் ஈடுபடக்கூடாது. அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டும்.

ஞாயிறு -
நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகளில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பிரத்தியங்கரா அம்மனை வணங்குங்கள், பிரத்தியங்கரா அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். மூல மந்திரத்தை உச்சாடனம் செய்து கொண்டிருங்கள். அதிக நன்மைகள் நடக்கும்.
****************************


ரேவதி -
நன்மைகள் பலவாறாக நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும் சகோதரர்களிடம் ஏற்பட்டிருந்த மன வருத்தங்கள் அகலும். ஆரோக்கியத்தில் எதிர்பாராத அளவுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும்.
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவியோடு அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள்.
தொழிலுக்குத் தேவையான அரசு உதவிகள் உடனடியாக கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கலைஞர்களுக்கு நண்பர்களால் வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். பெண்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் முழு வெற்றியை கொடுக்க கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.

புதன் -
அலுவலக வேலையாக பயணம் செல்ல வேண்டியது வரும். தொழில் தொடர்பான சந்திப்புகள் ஏற்படும். வியாபார வளர்ச்சியும் லாபமும் அமோகமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தை சுபமாக முடியும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகள் சுமுகமாக பேசி முடிக்கும் வாய்ப்பு உள்ளது.

வியாழன் -
மனம் மகிழும் சம்பவங்கள் அதிகமாக ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொலைபேசி வழித் தகவல் ஆனந்தத்தைத் தரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும். நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.

வெள்ளி -
குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரக்கூடிய நாளாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருக்கும். வியாபாரத்தில் லாபமும் திருப்திகரமாக இருக்கும். திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் நடத்துவதற்காக முகூர்த்த தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மனைவிவழி உறவினர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள்.

சனி -
முக்கியமான பிரச்சினைகளில் தீர்வு காண்பீர்கள். அலுவலக வேலைகளில் இருந்த சுணக்கமான நிலை மாறி, எளிதாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய விஷயங்களை சோதனை முயற்சியாக செய்து பார்ப்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். வரவும் செலவும் சமமாக இருக்கக்கூடிய நாள்.

ஞாயிறு -
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். செலவுகள் அதிகம் ஏற்படும் நாள். அக்கம்பக்கத்தினருடன் வீண்விவாதங்கள் செய்ய வேண்டாம். குடும்பத்தில் உங்கள் கோபத்தை வெளிக்காட்டாமல் இருக்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் அன்னையை வணங்குங்கள். மாரியம்மனுக்கு புடவை சாற்றி வழிபடுவது நன்மைகளை அதிகப்படுத்தும். ஆரோக்கியத்தில் இருக்கும் குறைபாடுகல் நிவர்த்தியாகும்.
******************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

பூரட்டாதிஉத்திரட்டாதிரேவதி ; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 22 முதல் 28ம் தேதி வரை)வார நட்சத்திரப் பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author