Published : 22 Jun 2020 15:21 pm

Updated : 22 Jun 2020 15:21 pm

 

Published : 22 Jun 2020 03:21 PM
Last Updated : 22 Jun 2020 03:21 PM

திருவோணம், அவிட்டம், சதயம் ; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 22 முதல் 28ம் தேதி வரை)

vaara-natchatira-palangal


- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

திருவோணம் -
நினைத்தது நிறைவேறும் வாரம். பணவரவு சரளமாக இருக்கும்.
நெருக்கடி தந்து கொண்டிருந்த பிரச்சினைகள் படிப்படியாக தீரும். இதுவரை மனக்குழப்பங்கள் தந்து கொண்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக விலக ஆரம்பிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் முற்றிலுமாக தீரும்.
அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் மாறும். நண்பர்கள் உங்களுக்கு தாமாக முன் வந்து உதவுவார்கள். தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். பெண்களுக்கு இதுவரை இருந்த உடல்நல பாதிப்புகள் முற்றிலுமாக விலகும்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இந்த வாரம் புத்திர பாக்கியம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு இந்த வாரம் புதிய ஒப்பந்தம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
மனதில் நினைத்த எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் பற்றிய நல்ல தகவல் உறுதியாகும்.

செவ்வாய் -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியை தரக் கூடிய நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்தும் தீரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

புதன் -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாகனப் பழுது, வீட்டு பராமரிப்பு செலவுகள் என அதிகமாக இருக்கும். அலுவலக பணிகளில் அதிக அழுத்தம் தருவதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலையே தொடரும்.

வெள்ளி -
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் சுயதொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை உருவாகும். அதற்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். சுபவிசேஷங்கள் நடத்துவது பற்றிய தேதி உறுதி செய்யப்படும்.

சனி -
தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையை செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான வாய்ப்புகளால் மன நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். சகோதரர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். தேவையான உதவிகளை செய்து தருவார்கள். பாகப்பிரிவினைகள் தொடர்பான விஷயங்கள் சுமுகமாக பேசி முடிக்கப்படும்.

ஞாயிறு -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். கலைத்துறையினருக்கு நண்பர்களால் ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த பணம் இன்று கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் -
திருமலை திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளை மனதார நினைத்து வணங்குங்கள். அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுங்கள், மிகச் சிறந்த நன்மைகளை உண்டாக்கும்.
***************************


அவிட்டம் -
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும்.
புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
ஆரோக்கியத்தில் இருந்த அச்சம் முழுமையாக விலகும். இதுவரை இருந்து வந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் தீரும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் அகலும். அவர்களுடைய கல்வி ஆர்வம் உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.
வியாபார வளர்ச்சி எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மனமகிழ்ச்சி தரும்படியாக இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நினைத்தது நிறைவேறும் நாள். எதிர்பாராத பண வரவு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரு மடங்காக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் தேவையான உதவிகளும் முதலீடுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சிலர் தாமாகவே முன்வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணவரவு சரளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். தாய்மாமன் வகையில் ஏற்பட்ட மனவருத்தங்கள் முற்றிலுமாக அகலும்.

புதன் -
எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். அலுவலகப் பணிகளில் செய்த வேலையை மீண்டும் திருத்தத்துடன் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும். நிதானப் போக்கை கடைபிடிப்பது மிகவும் நல்லது.

வியாழன் -
அதிக நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடன் உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி -
அலுவலகத்தில் உங்கள் பணியை மட்டும் கவனித்து வாருங்கள். மற்றவர்களுடன் கருத்து மோதல் செய்யவேண்டாம். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிப்பது நல்லது.

சனி -
இதுவரை முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும்.

ஞாயிறு -
பொறுமையும் நிதானமும் அவசியம். பேசுகின்ற வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. உங்கள் கருத்திலேயே பிடிவாதமாக இருக்க வேண்டாம். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களோடு வெளியே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை வழிபாடு செய்வது சிறந்த பலன்களை தரும். அம்மனுக்கு எலுமிச்சை மாலை சூட்டி வழிபட்டால் சிரமங்கள் முழுமையாக நீங்கும்.
***************************


சதயம் -
நினைத்தது அனைத்தும் நடக்கும் வாரம். பணவரவுகள் தாராளமாக இருக்கும்.
இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். சகோதர ஒற்றுமை மேலோங்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும்.
தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். தாயாரின் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். அல்லது இப்போது இருக்கும் வியாபார இடத்தை விரிவுபடுத்துவதற்குத் தேவையான பண உதவி கிடைக்கும்.
பெண்களுக்கு சுய தொழில் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது, தாமதமான புத்திர பாக்கியம் இப்போது உண்டாகும். கலைஞர்களுக்கு பெண் நண்பர்கள் மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவி இன்று கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் மனநிம்மதியைத் தரும். அலுவலகப் பணிகளில் மனநிறைவு உண்டானாலும், வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சியை இன்று தொடங்குவது நல்ல பலனைத் தரும்.

செவ்வாய் -
எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். நிதானத்தை கடைப் பிடித்தால் இனிதாக பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

புதன் -
இல்லத்தில் சுப காரியங்கள் சம்பந்தமான விஷயங்கள் முடிவு எடுக்கப்படும். எதிர்பாராத லாபம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். தொழிலுக்குத் தேவையான வங்கிக் கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

வியாழன் -
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் நாள். திருமணம் தொடர்பான தகவல் உறுதியாகும். திருமண தேதி குறிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். ஒரு சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வெள்ளி -
நல்ல பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி -
அலுவலக பணிகளில் அதிக கவனம் செலுத்தும் நாள் தாமதப்பட்டு கொண்டிருந்த பணிகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் நலிவுற்றது போல் தோன்றும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை இருக்கும். எதிர்பார்த்த பண உதவி தாமதம் ஆகலாம்.

ஞாயிறு -
அதிக நன்மைகள் ஏற்பட கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். நண்பர்கள் தொழில் தொடர்பான உதவிகளைச் செய்து தருவார்கள். தொலைபேசி வழித் தகவல் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவ தரிசனம் செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தடை தாமதங்கள் விலகும்.
****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

திருவோணம் அவிட்டம் சதயம் ; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 22 முதல் 28ம் தேதி வரை)வார நட்சத்திரப் பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author