Published : 22 Jun 2020 08:45 am

Updated : 22 Jun 2020 08:45 am

 

Published : 22 Jun 2020 08:45 AM
Last Updated : 22 Jun 2020 08:45 AM

அஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 22 முதல் 28 வரை)

vaara-natchatira-palangal

- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்வினி -
எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் வாரம்.
கடந்த இரண்டு வாரங்களாக இருந்த பிரச்சினைக்கு இந்த வாரத்தில் முடிவு எட்டப்படும். குடும்ப உறவுகள் பலப்படும். சகோதரரிடம் ஏற்பட்ட மனவருத்தம் அகலும். சிறுதூரப் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவதால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருந்த பணிச்சுமை அகலும். உங்கள் மீதான சில பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமாக மாறும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும்.
பெண்களுக்கு சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உறுதியாகும். கலைஞர்களுக்கு வெளிநாட்டில் வசிக்கும் நபர் மூலமாக வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். வங்கி தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தாய் மாமன் வகை உறவுகளால் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

செவ்வாய் -
மனதில் தேவையற்ற சஞ்சலம் ஒன்று உருவாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளில் நிம்மதி இருக்காது. மாலை நேரத்தில் கவலை தரும் செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். தேவையற்ற கருத்துக்களை எங்கும் தெரிவிக்காமல் இருப்பது நல்லது.

புதன் -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். செய்த தவறுகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக முனைப்போடு செயல்பட்டு வேலைகளை செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து ஒற்றுமை ஏற்படும்.

வியாழன் -
கிடைக்கின்ற செய்திகள் அனைத்தும் மன நிம்மதியையும் திருப்தியையும் தரக்கூடியதாக இருக்கும். அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த பணம் இன்று கைக்கு வந்து சேரும்.

வெள்ளி -
எதிர்காலம் கருதி சில திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது பற்றிய சிந்தனைகள் அதிகமாக ஏற்படும். அது தொடர்பாக முக்கிய நபர்களுடனும், நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் ஆலோசனை செய்வீர்கள், சுய ஜாதகம் சாதகமாக இருந்தால் தாராளமாக தொழில் தொடங்கலாம். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

சனி -
எடுத்த முயற்சிகள் அனைத்திலும் முழு வெற்றியைக் காணக்கூடிய நாள். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள்.

ஞாயிறு -
அமைதியாக இந்த நாளைக் கடந்து செல்லவேண்டும். பொறுமை, நிதானம் மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பது கூடாது. தேவையற்ற விவாதங்களைச் செய்யாமல் இருக்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை வணங்குங்கள். வயதானவர்களுக்கு, ஏழைகளுக்கு உங்களாலான உதவிகளைச் செய்யுங்கள். அதிக நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
************************


பரணி -
அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும் வாரம்.
குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். அதற்குத் தேவையான பண வரவு தாராளமாக இருக்கும். உறவினர்களாலும், சகோதரர்களாலும் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக மூத்த சகோதரர் தேவையான உதவிகளைச் செய்து தருவார்.
சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகப் பணிகளில் நிம்மதி நீடிக்கும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள், வியாபார வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலுமாக விலகும். மனதிலிருந்த குழப்பங்கள் அனைத்தும் தீரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். மாணவர்கள் கல்வியில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் அதே சமயம் ஆரோக்கியத்திலும் கவனம் எடுப்பது நல்லது. கலைஞர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாக வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
இயல்பான நாளாக இருக்கும். பெரிய மாற்றங்கள் அல்லது அதிசயங்கள் ஏதும் இருக்காது. சராசரியான நாளாகத்தான் இருக்கும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய முயற்சிகளில் சிறிது முன்னேற்றம் ஏற்படும்.

செவ்வாய் -
சுறுசுறுப்பாக பணியாற்றி வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். கடன் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு இன்று கடன் தொடர்பான நல்ல தகவல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். கமிஷன் தொடர்பான தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான தகவல் கிடைக்கும்.

புதன் -
நிதானமாக செயல்பட வேண்டிய நாள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தைக் கடைபிடித்து ஆராய்ந்த பின்பே முடிவெடுக்க வேண்டும். அவசர முடிவு எடுத்தால் உங்களுக்கு எதிராகத் திரும்பும். வீண் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களோடு அனுசரித்துச் செல்லுங்கள். தேவையில்லாமல் அவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

வியாழன் -
குழப்பங்கள் அனைத்தும் விடைபெறும் நாள். தெளிவான சிந்தனை உருவாகும். தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டிலிருந்து எதிர்பாராத உதவி கிடைக்கும்.

வெள்ளி -
பயணங்களால் ஆதாயம் கிடைக்க கூடிய நாள். சிறிய வேலை தானே என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் அந்த சிறிய வேளையிலும் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவடைந்து தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்தி உறுதியாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இன்று கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது.

சனி -
சுயமாகத் திட்டமிட்டு சில விஷயங்களை சோதனை முயற்சியாக செய்து பார்க்க முற்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குழந்தைகளின் கல்வி தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளுக்கு திட்டம் தீட்டுவீர்கள்.

ஞாயிறு -
திட்டமிட்ட காரியங்களும் திட்டமிடாத காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். பணவரவு எதிர்பாராத வகையில் தாராளமாக இருக்கும். கடன் அடைக்க வாய்ப்பு உண்டு. புதிய கடன் பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களாலும் உறவினர்களாலும் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய விஷயங்கள் முடிவாகும். மொத்தத்தில் மனநிறைவான நாளாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
துர்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபட வேண்டும். எலுமிச்சை தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்யுங்கள்., ஏழைப் பெண்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்து தருவது நன்மைகளை அதிகப்படுத்தித் தரும்.
*********************************


கார்த்திகை -
குடும்ப பிரச்சினைகள் ஆயிரம் இருந்தாலும் மன நிம்மதிக்கு குறைவிருக்காது.
பணவரவு சரளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். இந்த வாரம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடுவீர்கள். அதேசமயம் யாருக்கும் வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது.
அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி லாபம் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு பூர்வீகச் சொத்து தொடர்பான விஷயங்களில் சுமுகமான முடிவு ஏற்படும். திருமண முயற்சிகள் கை கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய கல்வி கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பாராத நிறுவனத்திலிருந்து அழைப்பு கிடைக்கும். வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். இளைய சகோதரரிடம் ஏற்பட்டிருந்த மன வருத்தம் தீரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

செவ்வாய் -
அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள். குழுவாக பணியாற்றுபவர்களுக்கு இன்று எடுத்துக்கொண்ட பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் அளவான லாபம் கிடைக்கும். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான விஷயங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

புதன் -
எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக வங்கியில் எதிர்பார்த்திருந்த கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபார வளர்ச்சிக்கு பலரும் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். குடும்பத்தில் மூத்தவர் ஒருவரால் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாழன் -
பொறுமையாக எந்த ஒரு விஷயத்தையும் கையாள வேண்டும். எதிர்வரும் பிரச்சினைகளை நாசூக்காக தவிர்க்க வேண்டும். வீண் விவாதங்களில் ஈடுபடக்கூடாது. தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டாம்.

வெள்ளி -
முடிக்காமல் இருந்த அனைத்து வேலைகளையும் இன்று சுறுசுறுப்பாகப் பணியாற்றி செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு சகோதரர்களால் உதவிகள் கிடைக்கும்.

சனி -
வியாபார நிமித்தமான பயணங்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள், தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை தொடர்பான மன நிறைவைத் தரும் தகவல் கிடைக்கும்.

ஞாயிறு -
மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றும். பரபரப்பாக இருப்பீர்கள். எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும். எதிர்காலம் கருதி சில திட்டங்களை வகுப்பீர்கள். குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசி சில விஷயங்களை சரி செய்து கொள்வீர்கள். திருப்திகரமான செலவுகள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
அழகன் முருகப்பெருமானை வணங்குங்கள். பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் படியுங்கள். நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
**************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

அஸ்வினி பரணி கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 22 முதல் 28 வரை)வார நட்சத்திரப் பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author