Published : 15 Jun 2020 12:15 PM
Last Updated : 15 Jun 2020 12:15 PM

மகம், பூரம், உத்திரம், வார நட்சத்திர பலன்கள் (ஜூன் 15 முதல் 21 வரை) 

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


மகம் -
ஒரு சில விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
போராட்டங்கள் அதிகம் ஏற்படும். வாரத் துவக்கத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். எதிர்பாராத செலவுகளும், ஒரு சில மருத்துவச் செலவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
வாழ்க்கைத்துணையுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். சகோதரர்கள் உங்கள் கருத்துக்கு எதிராக இருப்பார்கள்.
உத்தியோகத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். கடன் பிரச்சினைகள் நெருக்கடி தருவதாக இருக்கும்.
எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகலாம். பொறுமையாக அனைத்து விஷயங்களையும் கையாளவேண்டும். பெண்களுக்கு குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கலைஞர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

திங்கள் -
வரவும் செலவும் சமமாக ஏற்படும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான லாபம் உண்டாகும். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

செவ்வாய் -
அதிக நன்மைகள் ஏற்படும் நாள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பயணங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களை கிடைக்கப் பெறுவீர்கள்.

புதன் -
தொலைபேசி வழி தகவல் உற்சாகத்தை தரும். எதிர்கால திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடியான நிலை விலகும். மனதில் தேவையற்ற சிறிய கலக்கம் ஒன்று ஏற்படும். மனக்குறைகள் யாரிடம் சொல்வது என்று தவிப்பு ஏற்படும்.

வியாழன் -
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத உதவிகளும் அதிக லாபமும் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள், தேவைகள் அனைத்தும் தீரும். உத்தியோகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டு இருந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள்.

வெள்ளி -
பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். பணத்தைக் கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத சர்ச்சைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சனி -
ஆதாயம் அதிகமாக ஏற்படும். பயணங்களால் லாபம் உண்டு. தொழில் வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். சகோதரர்கள் தேடி வந்து உதவுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். புதிய பயிற்சிகளை மேற் கொள்வார்கள்.


ஞாயிறு -
பராமரிப்புச் செலவுகள் அதிகமாக ஏற்படும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மனைவி அல்லது மனைவி வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அவசியச் செலவுகல் தவிர அநாவசியச் செலவுகளை குறைக்க வேண்டிய நாள்.

வணங்கவேண்டிய தெய்வம் -
அம்பிகையை வழிபாடு செய்யுங்கள். துர்கை அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். அதிக நன்மைகளை ஏற்படுத்தி தரும்.
******************************


பூரம் -
எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வேலை மாற்றம் செய்ய விரும்புபவர்கள் இப்பொழுது அந்த முயற்சியில் ஈடுபடலாம்.
உத்தியோகத்தில் சகஜ நிலைமை நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். வியாபாரத்திற்கு ஒரு சில முதலீடுகள் கிடைக்கும். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த வங்கி பிரச்சினை இந்த வாரம் முடிவுக்கு வரும்.
திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் உறுதியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. கலைஞர்களுக்கு எதிர்பார்த்த உதவிகளும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

திங்கள் -
பொறுமை, நிதானம் மிக மிக அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனம் இருக்க வேண்டும். கவனக்குறைவு ஏற்பட்டால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். யாரிடமும் எதற்காகவும் வாக்குவாதங்களை செய்யக்கூடாது.

செவ்வாய் -
தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களை கிடைக்கப்பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை கையாண்டு வியாபாரத்தை வளர்ச்சியடைய செய்வீர்கள். தொழிலுக்கு இதுவரை இருந்த தடைகள் அகலும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

புதன் -
எதிர்பாராத உதவிகளும், எதிர்பாராத பணமும் கிடைக்கும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொழிலுக்கு அரசின் உதவி கிடைக்கும். சலுகைகள் கிடைக்கும். குழந்தைகளின் கல்விக்காக ஒரு சில முயற்சிகளை எடுப்பீர்கள்.

வியாழன் -
ஒரு சிலர் சொந்தத் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள், அது தொடர்பான ஆலோசனைகளை இன்று செய்வீர்கள். பெண்களுக்கு சுபகாரிய விசேஷங்கள் முடிவாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு முக்கியமான நிறுவனத்திலிருந்து அழைப்புகள் வரும்.

வெள்ளி -
எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. முக்கியமான சந்திப்புகளால் தொழில் வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் தொடர்பான செய்தி இன்று உறுதியாகும்.

சனி -
மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்படும். குழப்பங்கள் அதிகரிக்கும். சோம்பல் உண்டாகும். அலுவலகப் பணிகளில் சுணக்கம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஒருவித மந்த நிலை ஏற்படும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். செலவுகளை சிக்கனமாக செய்யுங்கள்.

ஞாயிறு -
கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் தீரும். வியாபார விஷயமாக சந்திப்புகள் ஏற்படும். தொழில் தொடர்பாக ஒரு சில ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். தரகு தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியாக ஒரு சில தேவையான உதவி இன்று கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அன்னையை வணங்குங்கள். ஆண்டாள் அருளிய அபிராமி அந்தாதி பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.
****************************


உத்திரம் -
நன்மைகள் அதிகம் ஏற்படும் வாரம். உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.
மருத்துவ செலவுகள் வெகுவாகக் குறையும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் குறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சலுகைகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட ஆதாயம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். தொழிலுக்கு இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
பெண்களுக்கு குடும்ப உறவுகளால் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உருவாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் சீரான வளர்ச்சி ஆர்வம் ஏற்படும். கலைஞர்ளுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டு ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும்.

திங்கள் -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வங்கி தொடர்பான கடனுதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய உத்திகளைக் கையாண்டு லாபத்தை அதிகரிப்பீர்கள்.

செவ்வாய் -
அதிகம் கோபப்படாமலும் உணர்ச்சிவசப்படாமலும் இருக்க வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லவேண்டும். அலுவலகத்தில் உங்கள் பணியை மட்டும் கவனியுங்கள்.

புதன் -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். அலுவலக வேலைகளில் ஏற்பட்ட பிரச்சினைகளை இன்று சரிசெய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த தேக்கநிலை மாறும். அரசு வழி உதவிகள் கிடைக்கும். கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

வியாழன் -
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு எதிர்பாராத அளவிற்கு நன்மைகள் நடக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவாகும்.

வெள்ளி -
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தரகு மற்றும் கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டு.

சனி -
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை இருந்து வந்த இடைஞ்சல்கள் அனைத்தும் விலகும்.

ஞாயிறு -
செலவுகள் அதிகமாக ஏற்படும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். அத்தியாவசிய செலவுகளைத் தவிர ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விடுங்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வணங்குங்கள். எதிர்ப்புகள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும்.
********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x