Published : 07 Jun 2020 19:31 pm

Updated : 07 Jun 2020 19:31 pm

 

Published : 07 Jun 2020 07:31 PM
Last Updated : 07 Jun 2020 07:31 PM

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ;  வார நட்சத்திர பலன்கள் (ஜூன் 8 முதல் 14 வரை)  

vaara-natchatira-palangal


’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


பூரட்டாதி -
நினைத்தது நிறைவேறும் வாரம். பணவரவு தாரளமாக இருக்கும்.
நெருக்கடி தந்து கொண்டிருந்த பிரச்சினைகள் படிப்படியாக தீரும். குடும்ப உறவுகள் பலப்படும். புத்திரபாக்கியம் இல்லாத தம்பதிக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும் வாய்ப்பு உள்ளது.
மருத்துவச் செலவு வெகுவாக குறையும். சகோதரர்களுடன் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் பெரிய மனிதரின் உதவியால் சமாதானம் ஆகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.
தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். இழந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். கலைத்துறையினருக்கு அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
மனம் இயல்பாக இருக்காது, பதட்டமும் படபடப்பும் இருக்கும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது. தொழில் அல்லது வியாபார சந்திப்புகளை தள்ளி வையுங்கள்.

செவ்வாய் -
நேற்றைய பிரச்சினைகள் அனைத்தும் இன்று முடிவுக்கு வரும். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தாமதமான பல விஷயங்கள் இன்று மீண்டும் செயல்பாட்டுக்கு வரும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

புதன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். வங்கியின் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.

வியாழன் -
வரவும் செலவும் சமமாக இருக்கும். செலவுகள் சற்று அதிகமாக இருந்தாலும் பிரச்சினையை ஏதும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். மனைவிவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். புத்திர பாக்கியம் உறுதியாகி மனமகிழ்ச்சி ஏற்படும்.

வெள்ளி -
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு கணவர் வழியில் எதிர்பாராத பண உதவி கிடைக்கும்.

சனி -
தாமதமாகிக் கொண்டிருந்த அலுவலக வேலையை இன்று செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மனநிறைவைத் தரும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். கமிஷன் தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும்.

ஞாயிறு -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
பிரத்தியங்கிரா அம்மனை வணங்குங்கள். ஏழைகளுக்கு புளியோதரை சாதம் தானம் தாருங்கள். பிரச்சினைகள் தீரும். நினைத்தது நிறைவேறும்.
*********************


உத்திரட்டாதி -
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய வாரமாக இருக்கும். குடும்ப உறவுகள் பலப்படும்.
சகோதர ஒற்றுமை மேலோங்கும். சகோதரருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். மாமன் வகை உறவுகளால் நன்மைகள் கிடைக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் எதிர்பார்த்தபடியே வளர்ச்சிப் பாதையில் செல்லும். வியாபாரம் வளர்ச்சி எதிர்பார்த்த படியே இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான செய்திகள் மனம் மகிழ்ச்சி தரும்படியாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

இந்த வாரம் -

திங்கள் -
முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். புதிய கடன் ஒன்று வங்கியில் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

செவ்வாய் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். எண்ணியது எண்ணியபடியே செயலாகும் நாள்.

புதன் -
உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். அலுவலகப் பணியில் உங்களுடைய வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையை மட்டும் கவனியுங்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். சங்கடங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.

வியாழன் -
அதிக நன்மைகள் ஏற்படும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். தேவையான கடன் உதவி கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி -
அலுவலகத்தில் பணிச்சுமை நீடிக்கும். தொழில் செய்யும் இடத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். எந்தச் செயலிலும் அதிக கவனம் வேண்டும். தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.

சனி -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒற்றுமை நீடிக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

ஞாயிறு -
குடும்பத்தினரின் தேவைகள் பூர்த்தி ஆகும். தொழில் மற்றும் வியாபார பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த முக்கியமான ஒப்பந்தம் இன்று நிறைவேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ சனீஸ்வர பகவானை வணங்குங்கள். எள் கலந்த தயிர்சாதம் ஏழைகளுக்குத் தானமாக கொடுப்பது மிகச் சிறந்த பலன்களை தரும்.
***********************


ரேவதி -
எடுத்துக்கொண்ட செயல்களை அனைத்தும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வாரம்.
பணவரவுகள் தாராளமாக இருக்கும். இல்லத்தில் சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். அலுவலகப் பணிகளில் திருப்திகரமான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் ஆதரவும் கிடைப்பதால் உங்கள் செயல்களில் உற்சாகம் பிறக்கும்.
தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகும்.
குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்போது குழந்தை பாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
பணவரவு தாராளமாக இருக்கும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

செவ்வாய் -
அலைச்சல் அதிகமாக இருக்கும். செலவுகள் கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகும்.

புதன் -
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் தேவையான அரசு உதவிகள் கிடைக்கும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயமாகும். புத்திர பாக்கியம் தொடர்பான செய்தி மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

வியாழன் -
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வெள்ளி -
செயல்களில் முன்னேற்றமான பலன்கள் நடைபெறும் நாள். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி -
நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். மனம் படபடப்பாக இருக்கும். தேவையற்ற சிந்தனைகள் உருவாகும். மனதில் அச்ச உணர்வு இருக்கும். பதட்டத்தை குறைத்து அமைதியாக மனதை வைத்துக் கொண்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது.


ஞாயிறு -
வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அயல்நாட்டில் இருக்கும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் உங்களுக்கு இணக்கமாகவும் உதவியாக இருப்பார்கள். நண்பர்களால் தொழில் அல்லது வியாபார ஆதாயம் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
யோக நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி ;  வார நட்சத்திர பலன்கள் (ஜூன் 8 முதல் 14 வரை) ரேவதிசொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author