Published : 07 Jun 2020 03:33 PM
Last Updated : 07 Jun 2020 03:33 PM

புனர்பூசம், பூசம், ஆயில்யம்  ;  வார நட்சத்திர பலன்கள் (ஜூன் 8 முதல் 14 வரை)  - 

புனர்பூசம் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும் வாரம்.
ஆதாயம் தரக்கூடிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கிறது. குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு உதவிகரம் நீட்டுவார்கள். மூத்த சகோதரி பக்கபலமாக இருப்பார். சகோதரர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக பேசித் தீர்க்கப்படும். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள்.
பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
செலவுகள் அதிகமாக இருக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். தேவை இல்லாமல் மற்றவர் மீது கோபத்தைக் காட்ட வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். மன நிம்மதியும் மனநிறைவும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.


புதன் -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் தீரும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சகோதரர்களும் நண்பர்களும் உதவி செய்ய முன்வருவார்கள்.

வியாழன் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். பெண்களுக்கு ஆரோக்கிய அச்சுறுத்தல் ஏற்படும்.

வெள்ளி -
உற்சாகமான நாளாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேங்கி நின்ற வேலைகள் அனைத்தையும் இன்று சுறுசுறுப்பாக செய்து முடித்து விடுவீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

சனி-
குடும்ப நலன் சார்ந்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சோம்பல் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தி குழப்பிக் கொள்வீர்கள். பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு -
பெரும் நன்மைகள் ஏற்படும் நாள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக முக்கிய தகவல் கிடைக்கும், அது மனநிறைவைத் தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி குரு பகவானை வணங்குங்கள். வெண்பொங்கல் தானம் செய்வது சிறப்பு.
************************


பூசம் -
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் வாரம். தேவைகள் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்காளி பிரச்சினைகள் முடிவுக்கு வந்து ஒற்றுமை உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். சகோதரர்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.கலைஞர்களுக்கு லாபம் தரக்கூடிய ஒப்பந்தம் ஒன்று கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படும்.பிள்ளைகளின் திறமைகளை கண்டு ஆச்சரியம் ஏற்படும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர முயற்சிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

செவ்வாய்-
எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். உதவிகள் அதிகம் கிடைக்கப்பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் கணிசமாக குறையும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன் -
தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். அலுவலக வேலைகளில் மனநிறைவும் உண்டாகும். பெண்களுக்குத் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
பொறுமை நிதானம் மிக அவசியம். உணர்ச்சிவசப்பட்டு எந்தச் செயலையும் செய்ய வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள்.

சனி-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகளால் புதிய தொழில் ஒப்பந்தம் ஏற்படும்.

ஞாயிறு -
தாமதமாகிக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் செய்து முடிப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரக வழிபாடும், முன்னோர்களை நினைத்து அவர்களை வணங்குவதும், ஏழைகளுக்கு உணவு வழங்குவதும் அதிக நன்மைகளைத் தரும்.
*****************************


ஆயில்யம் -
திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிக்கும் வாரம்.
தொழில், வியாபாரம் என எந்த புதிய முயற்சிகளில் ஈடுபட்டாலும் 100 சதம் வெற்றியைக் கொடுக்கும். உதவிகளும் தேவைகளும் தானாக தேடி வரும். அலுவலகப் பணியில் இயல்பான நிலையே நீடிக்கும்.
தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான பண உதவிகள் கிடைக்கும்.
பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அபரிமிதமான முன்னேற்றம் காண்பார்கள்.

இந்த வாரம் -

திங்கள் -
உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் கருத்துக் கூற வேண்டாம். அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டும். அக்கம்பக்கத்தினருடன் வீண் சச்சரவுகள் தவிர்க்க வேண்டும்.

செவ்வாய்-
நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தொழில் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு அரசின் உதவிகளும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

புதன்-
எந்த விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பயணங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை உயரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும்.

வெள்ளி-
சிறப்பான பலன்கள் நடைபெறும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். தொழிலுக்குத் தேவையான அனைத்து வித உதவிகளும் கிடைக்கும். குறிப்பாக அயல்நாட்டு நண்பர்கள் மூலம் முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

சனி -
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படும். நெருங்கிய உறவினர்களிடம் ஒரு சில உதவிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த பணவரவு இன்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகள் இன்று சுமுகமான முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானை வணங்குங்கள். நீர்மோர் தானம் தாருங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x