Published : 01 Jun 2020 11:40 AM
Last Updated : 01 Jun 2020 11:40 AM

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் (ஜூன் 1 முதல் 7-ம் தேதி வரை) 

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -
நன்மைகள் பலவாறாக நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
குடும்பத் தேவைகள் அனைத்தியும் நிறைவேற்றித் தருவீர்கள். குடும்பத்தினருடைய அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.
எதிர்பாராத தன லாபமும் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக ஏற்படும். தொழில் தொடர்பாக வேண்டிய உதவிகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் உண்டு.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக பெண் நண்பர்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
அதிக நன்மைகள் நடைபெறக்கூடிய நாள். எதிர்காலம் கருதி ஒரு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் இயல்பான நிலையே இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். பெண்களுக்கு இளைய சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய்-
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்ததற்கும் மேலாக கிடைக்கும். திடீர் தனலாபம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

புதன் -
பொறுமை, நிதானம், மனக்கட்டுப்பாடு அவசியம். நிதானத்தை இழந்தால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும். கடன் தொடர்பான பிரச்சினைகளில் அமைதியாக இருப்பது நல்லது. தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

வியாழன்-
நினைத்தது நிறைவேறும் நாள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது புதிதாக வியாபாரம் தொடங்குவது போன்ற விஷயங்கள் சாதகமாக இருக்கும். வங்கிக் கடன் தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்கள் இன்று நல்ல முடிவிற்கு வரும்.

வெள்ளி-
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணம் வரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த ஒப்பந்தங்களும் கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

சனி-
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாகன மாற்றச் சிந்தனை உண்டாகும். இடமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வியாபாரிகள் புதிய வியாபார வாய்ப்புகள் எதையும் இன்று ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

ஞாயிறு-
நண்பர்களாலும் உறவினர்களாலும் மகிழ்ச்சிகரமான செய்திகளை கிடைக்கப்பெறுவீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
மகாலட்சுமி தாயாருக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும். பணவரவு தாராளமாக இருக்கும்.
***********************************

மிருகசீரிடம்-
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். தேவைக்கேற்ற பணவரவு இருக்கும்.
ஒருசிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
வியாபாரம் வளர்ச்சியடையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம்-

திங்கள்-
வீண் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற சர்ச்சைகள் தோன்றும். பொறுமை அவசியம். நிதானமாக எந்தச் செயலையும் செய்ய வேண்டும்.

செவ்வாய்-
நேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.

புதன்-
குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஒப்பந்தங்கள் நிறைவேறும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

வியாழன்-
ஒரு சில எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிறுதூர பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பாராட்டுக்களை பெறுவீர்கள். தொழிலுக்கு அரசு உதவிகள் கிடைக்கும்.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பாரத அளவுக்கு தாராளமாக இருக்கும். தேவையான உதவிகள் தேடி வரும். வியாபார லாபம் திருப்திகரமாக இருக்கும். தொழில் தொடர்பான உதவிகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

சனி-
வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் இறுதி நிலையை எட்டும். எதிர்பார்த்த பணம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.

ஞாயிறு-
வீண்செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படும். உடல்நலத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டு. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் நடக்கும். சங்கடங்கள் தீரும்.
*********************************


திருவாதிரை-
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் எளிதான வெற்றியைக் காண்பீர்கள். முக்கியமான விஷயங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். சொத்து விஷயத்தில் வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சகஜமான நிலையே இருக்கும்.
தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். சிலருக்கு கடன் பிரச்சினைகள் நெருக்கடி தருவதாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
அலுவலகத்தில் தேங்கி நின்ற வேலைகள் அனைத்தும் முடியும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபார ஒப்பந்தம் ஏற்படும்.

செவ்வாய்-
தேவையற்ற சர்ச்சையில் சிக்க வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடுவது பிரச்சினையை உண்டு பண்ணும். சுய கட்டுப்பாடு தேவை.

புதன்-
மனநிம்மதி ஏற்படும் நாள். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். குடும்ப பிரச்சினைகள் தீரும். தொழில் வளர்ச்சி மனநிறைவைத் தரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.


வியாழன்-
லாபகரமான நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காணக்கூடியதாக இருக்கும். வேலையில் இடமாற்றம் தொடர்பான தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
வியாபார வளர்ச்சி நன்றாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இல்லத்தில் சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக பயணம் ஏற்படும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன நிறைவைத்தரும்.

ஞாயிறு-
அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் சற்று ஏமாற்றம் தரும். வீண் விவாதம் வேண்டாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். எதிர்ப்புகள் இல்லாமல் போகும். நினைத்தது நிறைவேறும்.
******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x