Published : 01 Jun 2020 10:37 am

Updated : 01 Jun 2020 10:39 am

 

Published : 01 Jun 2020 10:37 AM
Last Updated : 01 Jun 2020 10:39 AM

அஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் (ஜூன் 1 முதல் 7ம் தேதி வரை) 

vaara-natchatira-palangal

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்வினி -
அதிக அளவிலான நன்மைகள் ஏற்படும் வாரம் .
எதிர்பார்த்த தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தாய்வழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். மூத்த சகோதரரால் உதவிகள் கிடைக்கும்.
அதேசமயம் இளைய சகோதரர்களால் ஒரு சில சங்கடங்களையும் சந்திக்க வேண்டியது வரும். அலுவலகப் பணிகளில் திருப்திகரமான சூழ்நிலை இருக்கும். வேலை பற்றிய அச்சம் நீங்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.
வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பெண்கள் தங்கள் குடும்பத்தில் மன மகிழ்ச்சி ஏற்படும்படியான சுபகாரிய விசேஷங்கள் நடக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும்.
மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
திட்டமிட்ட காரியங்கள் மட்டுமல்லாமல், திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும்.சொந்த வீடு வாங்குதல், திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சுமுகமாக முடிவடையும்.

செவ்வாய் -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தான தர்ம காரியங்களில் ஈடுபடத் தோன்றும். தேவையான ஒரு சில உதவிகளை மற்றவர்களுக்கு செய்து தருவீர்கள். அலுவலகப் பணிகளில் மற்றவர்கள் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். முக்கியமான சந்திப்புகள் தள்ளிப் போகும்.

புதன் -
அதிக அளவிலான நன்மைகள் நடைபெறும். வியாபார விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

வியாழன் -
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பேசுகின்ற வார்த்தைகளில் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்கள் பணிகளை மட்டும் செய்யுங்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

வெள்ளி -
வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

சனி-
வரவும் செலவும் சமமாக இருக்கும். எதிர்பார்த்த தகவல் தாமதமாகும். கடன் சம்பந்தப்பட்ட விஷயம் கவலை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

ஞாயிறு -
ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்று பேசி முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். சுபவிசேஷங்கள் முடிவாகும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
திருமுருகனை வழிபாடு செய்யுங்கள். சுப்ரமணிய புஜங்கம் படியுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
*****************************


பரணி -
நல்ல பலன்கள் நடைபெறும் வாரமாக இருக்கும்.
தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்ப பிரச்சினைகளில் மூன்றாவது மனிதரின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இளைய சகோதரர்களிடம் இணக்கமாகச் செல்லுங்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைககளில் அமைதி காப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேறு வேலைக்கு மாறும் முயற்சி வெற்றியாகும்.
வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். புதிய வியாபார நிறுவனங்கள் ஆரம்பிக்கும் வாய்ப்பும் உண்டு. சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும். எதிர்பார்த்த தொழில் முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
நெருக்கடிகள் அகன்று ஆதாயம் பெருகும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டு மன மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். உங்களுக்கு தொடர்பில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். பயணங்களில் கவனமாக இருக்கவேண்டும். பொறுமை மிக மிக முக்கியம்.

செவ்வாய் -
அதிகளவு நன்மைகள் நடைபெறும் நாள். எதிர் பார்த்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

புதன் -
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செலவு ஏற்படும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் அதிக அழுத்தம் ஏற்படும். உயர் அதிகாரியிடம் மனவருத்தம் ஏற்படும்.

வியாழன் -
வியாபாரப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். நீண்ட நாளாக முடிக்க முடியாமல் இழுபறியாக இருந்த அலுவலக வேலையை இன்று செய்து முடிப்பீர்கள்.

வெள்ளி -
அதிகப்படியான நெருக்கடிகளையும் சங்கடங்களையும் சந்திக்க வேண்டியது வரும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். ஆத்திரத்தில் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு எதிராகத் திரும்பும் கவனமாக இருக்க வேண்டும்.

சனி-
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். தொழிலுக்கு முக்கியமான ஆலோசகர் ஒருவர் உங்களுக்கு உதவுவார். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கடன் தொடர்பான முக்கிய பிரச்சினை முடிவுக்கு வரும்.

ஞாயிறு -
தொலைதூரப் பயணங்கள் செய்ய வேண்டாம். பேச்சுவார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். ஒப்பந்தங்கள் போடுவதை தவிர்க்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

வணங்கவேண்டிய தெய்வம் -
கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள் அல்லது கேட்டு வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். எதிர்ப்புகள் அகலும். தேவைகள் பூர்த்தியாகும்.
*****************************************


கார்த்திகை -
எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். குடும்ப உறவுகள் பலப்படும் வாரம்.
ஒருவருக்கொருவர் அன்பு மழை பொழிவீர்கள். பழைய மனவருத்தங்கள் அனைத்தும் அகலும். தந்தைவழி உறவினர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதரர் தேடி வந்து உதவி செய்வார்.
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி முழு வெற்றியைத் தரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும்.
வியாபார நிறுவனத்தை இடமாற்றம் செய்யும் வாய்ப்பும் உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் மட்டுமல்லாமல் அனைத்து முயற்சிகளும் வெற்றி ஆகும். நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிக்கும் வெற்றிகரமான நாள்.

செவ்வாய் -
பயணத்தைத் தவிர்க்க வேண்டும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அலுவலகத்தில் அமைதியாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினருடன் தேவையில்லாத சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

புதன் -
மனமகிழ்ச்சி தரும்படியான செய்திகள் கிடைக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.மாணவர்களுக்கு கல்வியில் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.

வியாழன்-
வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டு.எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும்.நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும்.

வெள்ளி -
வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள்.

சனி-
தேவையில்லாத செலவுகள் ஏற்படும். வீட்டுப் பராமரிப்பு செலவுகள் கூடுதலாக இருக்கும். எதிர்பார்த்த ஒரு சில உதவிகள் தள்ளிப் போகும்.

ஞாயிறு -
நண்பர்களால் ஆதாயம் அடையும் நாள். முக்கியமான நண்பர் ஒருவரால் வியாபாரம் தொடர்பான லாபம் கிடைக்கும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முழுமையடையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் சாதகமாக இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீதுர்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
***************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

அஸ்வினிபரணிகார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் (ஜூன் 1 முதல் 6 வரை)சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author